உங்கள் தொகுதி எங்கள் பார்வை : திருத்தணி…
28 February 2021, 1:27 pmஅரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தணி சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,82974. இதில் ஆண் வாக்காளர்கள் 1,38741. பெண் வாக்காளர்கள் 1,44266. இதர வாக்காளர்கள் 27.
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட 7 ஊராட்சிகளும் திருவாலங்காடு நகராட்சிக்கு உட்பட்ட 7 ஊராட்சிகளும் இதில் அடக்கம். பல சமூகத்தவர் கலந்து வாழும் இந்த தொகுதியில் வன்னியர்கள், முதலியார் ஆகிய சமூகத்தவர் இங்கு பெரும்பான்மையாக உள்ளனர்.
திருத்தணி நகராட்சி வாக்காளர்கள் வெற்றி தோல்வியை தீர்மானிப்பார்கள். கடந்த மூன்று உள்ளாட்சி தேர்தலில் திமுக வென்றது திமுகவிற்கு பலமாக பார்க்கப்படுகிறது .
ஆனால் இங்கு இதுவரை நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க இருமுறை மட்டுமே வென்றுள்ளது. அஇஅதிமுக ஆறுமுறை வென்றுள்ளது. அவர்களின் சக்தியை உணர்த்துகிறது. தற்போதும் அஇஅதிமுக சார்பில் பி.எம். நரசிம்மன் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார். இருகட்சிகளும் சமபலத்துடன் மோதுவதாக நாம் தீர்மானித்தாலும் தேர்தல் நடைபெறும் நாள்வரை போட்டி கடுமையாக இருப்பதை களத்தில் காணலாம்.
இங்கு தேமுதிக, பாமக ஆகியவை தலா ஒருமுறை ஜெயித்துள்ளனர். அவர்கள் கூட்டணி அமையும் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
0
0