ஓடும் பஸ்ஸில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் அட்டகாசம் : இதுக்கு ஒரு முடிவே இல்லையா…? நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு..!!!

Author: Babu Lakshmanan
7 December 2021, 12:02 pm
Quick Share

திருவள்ளூர் அருகே அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் சாகசம் மேற்கொள்ளும் பள்ளிமாணவர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஓடும் பேருந்தில் ஏறி கொண்டு அவர்கள் படிக்கட்டில் தொங்கியும், சாலையில் காலை தேய்த்தப்படியும், ஜன்னல் கம்பியில் எரியும் மாணவர்கள் அட்டகாசம் செய்கின்றனர். ஏற்கனவே, திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் பள்ளி மாணவரும், மாணவியும் சாகசம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதன் பிறகு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் மாணவர்களின் குடும்பத்துடன் அழைத்து அறிவுரை செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து, இதுபோன்று மாணவர்கள் யாரும் ஈடுபடக்கூடாது என்று அவர் அறிவுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை செய்து இருந்த நிலையில், மீண்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பேருந்தில் சாகசம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எந்தவித அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பே அரசு இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இத்தகைய சாகசங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Views: - 218

0

0