திருவள்ளுவருக்கு வந்த சோதனை! இந்து மதத்தைச் சேர்ந்தவரா?…தமிழகத்தில் திடீர் சர்ச்சை!

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2021, 9:01 pm
Thiruvalluvar - Updatenews360
Quick Share

உலகப் பொதுமறைகளில் நான்காவது மறையாக போற்றப்படுவது திருக்குறள்.
சரியாக 2052 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் என்ற ஞானியால் எழுதப்பட்ட வாழ்வியல் நூல்.
அது சாதி, மதம், மொழி, நாடுகளைக் கடந்த ஒன்று.

Thirukural by Prabhu - (Android Apps) — AppAgg

எந்த ஒரு மதத்தையும் குறிப்பிட்டு பேசாத உலகின் ஒரே பொதுமறை நூல் திருக்குறள் மட்டுமே. எனவேதான் அது அனைத்து மதத்தினராலும் பாராட்டப்படும் நூலாகவும் உள்ளது.

திருவள்ளுவருக்கு காவிச்சாயம்

எனினும் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே திருவள்ளுவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகிறார். குறிப்பாக 2 ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூரில் உள்ள திருவள்ளுவர் சிலை அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு பின்பு காவி வேட்டி அணிவிக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

कवि तिरुवल्लुवर विवाद पर भाजपा का जवाब, कहा- “वे महान संत थे, ना कि द्रमुक  नेता” | स्वराज्य

அனைத்து மதத்தினரும் போற்றும் திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசி, அவரை ஒரு இந்துத் துறவி என்பதுபோல சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். அது தமிழ்நாட்டில் நடக்காத காரியம் என்று திராவிட சிந்தனையாளர்கள் கொந்தளித்து எழுந்தனர்.

Don't try to saffronise Thiruvalluvar: Stalin to BJP- The New Indian Express

அப்போது, திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரை, காவிக் கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்து விடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்!” என்று கண்டித்து இருந்தார்.

அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு

திருவள்ளுவர் சிலைக்கு காவி வேட்டியை மாலையாக அணிவிப்பது, அவருடைய உருவப் படத்தில் வேட்டியை காவி நிறத்தில் மாற்றுவது எல்லாமே பாஜகவின் கீழான செயல் என்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மைய தலைவர், கமல்ஹாசன், விசிக தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளிட்ட பலரும் அப்போது இதற்கு கடும் கண்டனமும் தெரிவித்தனர். தங்களை சமூகப் போராளிகளாக அடையாளப்படுத்திக் கொண்ட நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் சிலரும் இதற்காக உரக்க குரல் கொடுத்தனர்.

திருவள்ளுவர் இந்து மதத்தை சார்ந்தவரா?

திருவள்ளுவர் ஒரு இந்து அல்ல என்ற கருத்தையும் அவர்கள் வாதமாக முன்வைத்தனர். இந்த நிலையில்தான் திருவள்ளூர் பற்றிய ஒரு சர்ச்சை தற்போது தமிழகத்தில் வெடித்துள்ளது. அதற்கு ஒரு பின்னணியும் உண்டு.

Targeting ₹30-lakh crore investments in 10 years: TN Industries Minister Thangam  Thennarasu - The Hindu BusinessLine

அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “திருக்கோவில்களில் தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம் ஆகியவற்றோடு திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும்” என்று அறிவித்து இருந்தார்.

இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் திருக்குறள் வகுப்புகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம், திருவள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதை தமிழக அரசு ஒப்புக்கொண்டு இருப்பதாக” சமயச் சார்பற்றோர் அமைப்பினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

திமுக அரசு மீது குற்றச்சாட்டு

“திருவள்ளுவர் இந்து மதத்திற்கு மட்டுமே தனது போதனைகளை வைக்கவில்லை. உலகில் உள்ள அத்தனை மதங்களுக்கும் நீதி கூறும் ஒரு நூலாகத்தான் அது உள்ளது. அப்படி இருக்கும்போது திருவள்ளுவரை இந்து மதம் என்கிற ஒரு கூண்டுக்குள் திமுக அரசு ஏன் அடைக்கிறது? என்பது புரியவில்லை…

அப்படியென்றால் திருவள்ளுவர் சிலைக்கு சிலர் காவிச்சாயம் பூசியதை திமுக அரசு ஏற்றுக்கொண்டதாகவே அர்த்தமாகிறது. திருக்குறள் கூறும் உலக நெறியை, வாழ்க்கை தத்துவத்தை இந்துக்கள் மட்டுமின்றி கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என பல்வேறு மதத்தினரும் பின்பற்றி வருகிறார்கள்.

அதனால்தான் அது உலகப் பொதுமறை நூலாகவும் திகழ்கிறது. எனவே இந்து கோவில்களில் திருக்குறள் வகுப்புகளை எடுக்க வைத்து, திருவள்ளுவர் ஒரு இந்து என்ற முத்திரையை குத்தக் கூடாது. இல்லையில்லை… அவர் அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர் என்று தமிழக அரசு கூறுமேயானால் பிற மத வழிபாட்டுத் தலங்களிலும் திருக்குறள் வகுப்புகளை எடுப்பதற்கு திமுக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்பது சமயச் சார்பற்றோர் அமைப்பின் கோரிக்கையாகவும் உள்ளது.

கிருஷ்ணசாமி கண்டனம்

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இந்துக் கோவில்களில் இனிமேல் தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம் போன்ற பக்தி வகுப்புகளோடு திருக்குறள் வகுப்புகளும் நடத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். இந்த செயல் அவரின் திருக்குறள் மீதான அளவளாவிய பற்று என்று எடுத்துக் கொள்வதா? அல்லது இந்து கோவில்கள் மீதான திராவிட வெறுப்பு என்று எடுத்துக் கொள்வதா? எனத் தெரியவில்லை. இந்து வழிபாடுகளும், அதனுடைய கலாச்சாரமும், பண்பாடும் பன்னெடுங்கால பாரம்பரியம் கொண்டவை. அதன் மீது நம்பிக்கை வைப்பதும், வைக்காததும் தனி மனித விருப்பம்.

How Mainstream Media In Tamil Nadu Got Exposed By A Leader Who Wants His  Community Delisted As SC

தங்கம் தென்னரசு சட்டப் பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் இல்லாமல் இருந்தால் அவர் கூறுவதை யாரும் கண்டுகொள்ளவும் மாட்டார்கள்; பொருட்படுத்தவும் மாட்டார்கள். ஆனால் அவர் தற்போது தமிழ் மாநிலத்தின் ஒரு துறையின் அமைச்சராக இருக்கிறார். அவர் பேசும் பேச்சுக்களுக்கும், அவரது அறிக்கைகளுக்கும் ஒரு செயல் வடிவம் கொடுக்கப்படும். அவரின் கருத்து இந்த மாநில அரசின் கருத்தாகவே கொள்ளப்படும்.

எந்தவொரு அரசும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிட்டு எந்தவொரு சாதி, மத, இனத்தோடும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது. குறிப்பாக, மத நம்பிக்கையிலிருந்து அரசு முற்றாக விலகியே இருக்க வேண்டும் என்பதே அரசியல் சாசன விதி. கோவில்களின் சொத்துக்களையும், உடைமைகளையும் அரசின் ஒரு துறையின் கீழ் கொண்டு வருவது என்பது வேறு; மத நம்பிக்கையில் அரசு தலையிடுவது என்பது வேறு. தேவாரம், திருவாசகம் என்பன முழுக்க முழுக்க சமயம் சார்ந்த நூல்கள். அவை கோவில்களில் பாடுவதற்கு என்றே சமயக் குரவர்களால் உருவாக்கப்பட்டவை. அவற்றை பாடுவதற்கு எவ்வித ஆட்சேபனையும் இருக்காது.

सन्त तिरुवल्लुवर जीवन परिचय (जीवनी) - Thiruvalluvar Biography in Hindi

ஆனால், திருக்குறள் என்பது எச்சமயத்தையும் சாராத ஒரு பொதுமறை நூல் ஆகும். அறம், பொருள், இன்பம் என உலக மாந்தர்களிடையே ஒரு பொது ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. அந்த திருக்குறளில் உள்ள காமத்துப்பாலைக் கூட, அது ஒரு வாழ்க்கை கல்வி; ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அதன் முழு அம்சத்தையும் முழுமையாகத் தெரிந்தால் மட்டுமே குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு கூட பள்ளிகளில், கல்லூரிகளில் காமத்துப்பாலைச் சொல்லிக் கொடுப்பதில்லை. அப்படி இருக்கையில் திருக்குறளை கோவில்களில் போதிப்பது என்பது எப்படிச் சரியானதாக இருக்க முடியும்?

திருக்குறளை தமிழக மக்களிடத்தில் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கம் நல்ல நோக்கமாக இருப்பின் அதற்கான செயல் திட்டங்கள் நன்றாக இருக்க வேண்டும். 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா கிராமங்களிலும் ’ஐயன் திருவள்ளுவர் படிப்பகத்தை’ உருவாக்க முயற்சி எடுத்தீர்கள். திருவள்ளுவர் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டவர்; அவரை ’ஐயன்’ என்று அழைக்கக்கூடாது எனச் சுட்டிக் காட்டியவுடன் திருவள்ளுவரையே விட்டுவிட்டீர்கள். இப்பொழுது திருவள்ளுவரையே நேராகக் கோவிலுக்குள் கொண்டு போய் வைக்கிறீர்கள். ’மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்’ என்ற மிக உயரிய கருத்துக்களைச் சொன்ன திருவள்ளுவரையும், திருக்குறளையும் நீங்கள் இந்து கோவில்களில் கொண்டு செல்வது திருவள்ளுவரையும், திருக்குறளையும் அவமதிப்பதற்குச் சமம்; வேண்டாம் இந்த விபரீதம்.

அன்பு சகோதரர் தங்கம் தென்னரசு அவர்களே, தொண்டு என்பது முதலில் வீட்டில் இருந்தே தொடங்கப் படவேண்டும் என்பது பொன்மொழி. எனவே திருக்குறளை முதலில் அனைத்து கழக கண்மணிகளிடத்திலும் கொண்டு செல்லுங்கள்; சாதி, மத, இன உணர்வுகள் இல்லாமல் நல்ல மனிதர்களாக உண்டாக்கும் பட்டறைகளாக மாற்றிக் காட்டுங்கள். அதைத் தமிழகமும், இந்தியாவும், உலகமும் பின் தொடரட்டும். அதுவே, திருக்குறளை உலகறியச் செய்யும் செயலாகும். அதை விட்டுவிட்டு திருக்குறளை கோவில்களுக்குள் கொண்டு சென்று மதம் சாரா அறநூலை மறைநூலாக்க முயற்சி செய்யாதீர்கள்!

திருக்குறள்-திருவள்ளுவரை காவியும் ஆக்க வேண்டாம்; கருப்பும் ஆக்க வேண்டாம்; மறைமுகமாக திராவிடமும் ஆக்க வேண்டாம்’’ என்று கூறி இருக்கிறார்.

அரசியல் விமர்சகர்கள் கருத்து

அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறும்போது, “திருக்குறள் வகுப்புகள் இந்துக் கோவில்களில் எடுக்கப்படும் என்ற அறிவிப்பு திமுக தனது கொள்கைகளை பரப்புவதற்கு எடுக்கும் ஒரு முயற்சியாகவே தென்படுகிறது. ஏனென்றால் திருக்குறளுக்கு மறைந்த திமுக தலைவர் குறளோவியம் என்ற பெயரில் நீண்ட விளக்க உரை எழுதியுள்ளார். அது புத்தகமாகவும் வெளிவந்துள்ளது.

Thiruvalluvar... - Thiruvalluvar Polytechnic College

அதை இனி கோவில்களில் திமுக பேச்சாளர்கள் மூலம் பக்தர்களிடம் திணிக்கும் முயற்சியும் நடக்கலாம் என்கிற ஒரு அச்சமும் எழுகிறது. அப்படியெல்லாம் இல்லை உண்மையிலேயே இது சிறந்ததொரு முயற்சிதான் என்று திமுக அரசு சொல்லுமேயானால் அதை அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் போதிப்பதுதான் சிறந்ததொரு நடைமுறையாக இருக்கும். திமுக அரசும் தன்னை முற்றிலுமாக ஒரு மதச்சார்பற்ற அரசு என்பதை வெளிப்படுத்தும் நல்லதோர் வாய்ப்பாகவும் அது அமையும். இன்னொரு விஷயம், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசுவதாக முன்பு கடும் கண்டனம் தெரிவித்த திமுக தற்போது அதை அப்படியே அங்கீகரிப்பது போலவும் உள்ளது” என்று குறிப்பிட்டனர்.

Views: - 475

0

0