திருவாரூரில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும் : முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!!

28 August 2020, 1:25 pm
Cm palanisamy - updatenews360
Quick Share

திருவாரூர் : திருவாரூரில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருவாரூர் ஆட்சியர்‌ அலுவலகத்தில்‌ உள்ள கூட்ட அரங்கில்‌ மாவட்ட வளர்ச்சி திட்டபணிகள்‌ மற்றும்‌ கொரானா தடூப்பு பணிகள்‌ குறித்து அதிகாரிகள்‌ மற்றும்‌ சுகாதாரத்துறையினருடன்‌ ஆய்வு நடத்தினார்‌.

இதைத் தொடர்ந்து, அவர் பேசியதாவது :- நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கடந்த ஜுலை மாதமே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பிலும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் மாணவர்களின் நலனே முக்கியம்.

திருவாரூரில் விவசாயம் சார்ந்த தொழில்சாலை அமைக்கப்பட உள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் 8 வகையான தொழில்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் வரும் போதுதான் கூட்டணிக்கு யார் தலைமை வகிப்பார்கள் என்பது குறித்து முடிவு செய்ய முடியும். தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில், யார் தலைமையில் கூட்டணி என்பது தற்போது விவாதிப்பது தேவையற்றது, எனக் கூறினார்.

முன்னதாக திருவாரூரில் ரூ.22.66 கோடி மதிப்பிலான 23 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.11.50 கோடி மதிப்பிலான 14 முடிவுற்ற பணிகளை அவர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, ரூ.5.53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.