இந்த ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம்.. 5 ஆண்டுகள் நீடிக்காது : பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2024, 11:44 am

ஆந்திரா தமிழக எல்லையான அழகிரிப்பேட்டை பகுதியில் அம்பேத்கர் திருவுருவ சிலையை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன், உளவுத்துறை அறிவுறுத்தல் படி எந்தெந்த தமிழகத்தில் தலித் தலைவருக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதை அறிந்து அரசு போலீசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

மின் கட்டணம் உயர்வை விடுதலை சிறுத்தை கட்சி எதிர்க்கிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையால் கைது செய்து படகுகளை சிறைபிடித்து வைத்திருப்பதை ஒன்றிய அரசு இலங்கை அரசிடம் பேசி விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உத்தரபிரதேசத்தில் உட்கட்சி பூசல் ஏற்பட்டு வருவதால் யோகி ஆதித்யநாத்
அரசு 5 ஆண்டுகள் நீடிப்பது கடினம் என கூறினார்.

  • Kamal haasan decided to not act in other companies இதுதான் என்னோட கடைசி படம்-திடீர் முடிவெடுத்த கமல்ஹாசன்? பகீர் கிளப்பும் தகவல்…