தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு : காவல் ஆய்வாளர் உள்பட 6 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு

23 September 2020, 4:52 pm
Tuticorin Youth Murder- updatenews360
Quick Share

தூத்துக்குடி : தட்டார்மடம் வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் உள்பட 6 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் பகுதியை சேர்ந்த வியாபாரி செல்வன் என்பவர், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி மர்மநபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். படுகொலை செய்யப்பட்ட செல்வனின் தாயார் எலிசபெத், அதிமுகவில் இருந்த திருமணவேல் மற்றும் தட்டார்மடம் காவல் ஆய்வாளர்தான் காரணம் என புகார் அளித்திருந்தார். மேலும் நிலத்தகராறு காரணமாக தொடர்ந்து எனது 3 மகன்கள் மீது பல்வேறு பொய் புகார்கள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த காவல்துறையினர், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உட்பட மேலும் சிலர் மீது கொலை வழக்கு உட்பட 4 பிரிவுகளில் நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காவல் ஆய்வாளர் ஹிரிகிருஷ்ணனை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது.

இன்று இந்த வழக்கு தொடர்பாக விசாரித்த டிஜிபி, வழக்கை சிபிசிடிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை திசையன்விளை போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில், வியாபாரி செல்வன் கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Views: - 1

0

0