மின்னல் வேக கொரோனா..! கடைகளுக்கு கட்டுப்பாடுகள்..! எத்தனை மாவட்டங்களில் தெரியுமா?

22 June 2020, 7:10 pm
Quick Share

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தலைநகர் சென்னை, அதனை சுற்றியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 30ம் தேதி வரை முழு பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் சில பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  ராமநாதபுரத்தில் வர்த்தக சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட மக்களின் நலன் கருதியும், அதேபோல் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் நலன் கருதியும் நாளை காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே வர்த்தக நிறுவனங்கள் செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பால், மருந்து கடைகள் மற்றும் ஓட்டல்களுக்கு நேரக்கட்டுப்பாடுகள் கிடையாது. ஓட்டல்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

அதேபோல, சேலம் மாவட்டத்தில் நாளை மறுநாள் முதல் 30ம் தேதி வரை கடைகள் திறப்பு நேரத்தை குறைக்க வணிகர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். தினமும் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.