உலகில் 100 செல்வாக்குமிகுந்த நபர்களின் பட்டியல் வெளியீடு : மோடிக்கு அடுத்த இடத்தில் டெல்லியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி..!

23 September 2020, 4:43 pm
times famous 230920
Quick Share

உலகில் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக, டெல்லியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டியும் இடம் பிடித்துள்ளார்.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் உலகில் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களின் பட்டியலை டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், பிரதமர் மோடி மட்டுமே இடம்பிடித்துள்ளார். 2014, 2015, 2017 ஆண்டுகளை தொடர்ந்து, இந்த ஆண்டிலும் பிரதமர் மோடியின் பெயர் இடம் பெற்றுள்ளது. கலைஞர்கள் துறையில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா இடம்பிடித்துள்ளார்.

அதேபோல, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, உலகிலேயே முதல் எச்.ஐ.வி. நோயாளியைக் குணப்படுத்திய பேராசிரியர் ரவீந்திர குப்தா, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், ஜெர்மன் அதிபர் அஞ்சலோ மெர்க்கல், விண்வெளி வீரர் கிறிஸ்டினோ கோச், ஜெசிகா மெய் உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளனர்.

இந்த பிரபலங்களுக்கு மத்தியில் இந்தியாவின் டெல்லியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டியான பில்கிஸ் பெயரும் டைம்ஸ் பத்திரிக்கையின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்த பெண்களில் ஒருவர் பில்கிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.