பட்டப்பகலில் பயங்கரம்: ஓட ஓட விரட்டிப் படுகொலை: தலையையும் கொத்திச் சிதைத்த கொடூரம்….!!
Author: Sudha8 August 2024, 4:46 pm
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரையாம்புதூர் என்ற இடத்தில் இன்று காலை 8 மணி அளவில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் அவருடைய தலையையும் கொலையாளிகள் கொத்திச் சிதைத்துச் சென்றனர்.
கொலை செய்யப்பட்டவர் சிவகங்கை மாவட்டம் உடையன்குளம் பகுதியை சேர்ந்தவரும் பிரபல ரவுடியான வினோத் கண்ணன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கொலை செய்யப்பட்ட வினோத் கண்ணன் மீது கொலை, ஆள் கடத்தல் எனப் பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பவம் நடந்த இடத்தின் அருகே, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் பங்கேற்ற இருந்த நிலையில், அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
0
0