தமிழகத்திற்கு ஸ்டாலின் மட்டுமே முதலமைச்சர் அல்ல… இன்னும் இருவர் இருக்கிறார்கள் : அண்ணாமலை கடும் விமர்சனம்

21 July 2021, 1:24 pm
Quick Share

சென்னை : தமிழகத்திற்கு மட்டும் 3 முதலமைச்சர்கள் இருப்பதாக திமுகவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய இணையமைச்சராக எல்.முருகன் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்டார். மாநில தலைவராக பொறுப்பேற்றக் கொண்டதில் இருந்து ஊடகங்களை அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார்.

annamalai bjp - updatenews360

இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அதாவது தமிழகத்திற்கு தற்போது 3 முதலமைச்சர்கள் இருப்பதாக கிண்டலடித்துள்ளார். முதலமைச்சராக ஸ்டாலின் இருந்த போதிலும், 2வது முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலினும், 3வது முதலமைச்சராக மருகமன் சபரீசனும் இருப்பதாக அவர் கூறினார்.

தலைமைச் செயலகத்தின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் அறையில் பெரியா, அண்ணா, கருணாநிதி மற்றும் ஸ்டாலின் புகைப்படங்களுக்கு அடுத்தபடியாக, உதயநிதி ஸ்டாலினின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த சூழலில் பாஜக தலைவர் அண்ணாமலை இவ்வாறு கூறியிருக்கிறார். அவரது இந்தப் பேச்சை குறிப்பிட்டு, பாஜகவினர் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். தலைவராக பொறுப்பேற்ற அண்ணாமலையின் அதிரடிய ஆரம்பம் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 255

0

0

Leave a Reply