வேளாங்கண்ணி மாதா ஆலயம், நாகூர் தர்காவில் எடப்பாடியார் சிறப்பு பிரார்த்தனை : மதநல்லிணக்கத்தை பாராட்டும் முதலமைச்சர்!!!

9 December 2020, 11:57 am
Cm in nagur dhrga -updatenews360
Quick Share

நாகை : நாகூர் தர்காவிற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குல்லா அணிந்து தொழுகையில் பங்கேற்ற நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினத்திற்கு ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்றார். அங்கு, புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆய்வு செய்த அவர், வேளாங்கண்ணி தேவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற பிரார்த்தனையில் பங்கேற்றார்.

இதைத் தொடர்ந்து, நாகூர் தர்காவில் கனமழையால் சேதமடைந்த குளத்தின் சுற்றுச்சுவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். அப்போது, பாதிக்கப்பட்ட குளத்தின் சுற்றுச்சுவரை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் ஆணையிட்டார். பின்னர் நாகூர் தர்காவில் நடந்த சிறப்பு வழிபாட்டில் குல்லா அணிந்தபடி முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டார்.

வேளாங்கண்ணி கிறிஸ்துவ ஆலயம், நாகூர் தர்கா ஆகியவற்றில் நடந்த சிறப்பு பிரார்த்தனைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டது மதநல்லிணக்கத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

Views: - 0

0

0