ராமநாதபுரத்தில் ரூ.167.61 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி..!

22 September 2020, 1:43 pm
EPS - updatenews360
Quick Share

ராமநாதபுரம் : ரூ.167.61 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார்.

மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பரவல் குறித்து ஆய்வு நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று ராமநாதபுரத்தில் ஆய்வு நடத்தினார். பின்னர், அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.70.54 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், ரூ.24.24 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்கள் மற்றும் அரசு கட்டிடங்களை திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, லடாக் எல்லையில் சீன ராணுவத்தினருடனான மோதலின் போது உயிரிழந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதி தேவிக்கு இளநிலை உதவியாளர் பணி உள்பட 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும், மொத்தம் ரூ.167.61 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லை நாட்டிய அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அவர் கூறுகையில், “சரியான சமயத்தில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் மழைநீர் சேமிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் 308 குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டன. மேலும், நதிகள், ஓடைகளின் குறுக்கே தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” எனக் கூறினார்.

Views: - 0

0

0