குழந்தைக்கு பெயர்வைக்க சொன்ன அதிமுக தொண்டர்..! முதல்வர் “அந்த” பெயரைக் கூறியதும் ஆர்ப்பரித்த மக்கள்..!

4 April 2021, 6:41 pm
TN_CM_EPS_Election_Campaign_UpdateNews360
Quick Share

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சேலம் மாவட்டம் ஆத்தூரில் ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கச் சொன்ன பெற்றோருக்கு, அளித்த பதிலைக் கேட்டு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் ஆர்ப்பரித்தனர்.

ஒவ்வொரு பகுதிக்கும் சென்று தங்கள் ஆட்சியின் சாதனைகளை எடப்பாடி பழனிச்சாமி பட்டியலிட்டார். பொதுமக்களும் அவரை காண கடலலை போல் திரண்டனர். ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் தாங்கள் செய்த சாதனைகளையும், செய்ய போகிற நலத்திட்டங்களையும் விளக்கி தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், அவர் தொண்டை கட்டி குரலே மாறிப்போனது. எனினும் இது எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்காக பரப்புரை மேற்கொண்டார்.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அதிமுக வேட்பாளர் ஆர்.மணியை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு நடுவே ஒரு பெண் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு முதல்வர் எடப்பாடியிடம் அதிமுக தொண்டர் ஒருவர் வேண்டுகோள் விடுத்தார். தொண்டரின் வேண்டுகோளுக்கிணங்க, பிரச்சார வேனில் இருந்து அந்த பெண் குழந்தையை தூக்கிய முதலமைச்சர் குழந்தையை கொஞ்சினார்.

பின்னர் குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் வைத்தார். பெயரை அவர் மைக்கில் அகூறிய உடனே அந்த இடமே அதிர்ந்து போகும் அளவிற்கு அங்கிருந்தவர்கள் ஆர்ப்பரித்து மகிழந்தனர்.

Views: - 31

4

0