தமிழகத்தில் இன்று 5875 பேருக்கு கொரோனா…! உச்சக்கட்டமாக 98 பேர் பலி

2 August 2020, 6:30 pm
Corona Cbe - Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் இன்று 5,875 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று ஒரே நாளில் மேலும் 5,875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 1,065 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,951 ஆக உயர்ந்துள்ளது. இன்று உச்சக்கட்டமாக 98 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,132 ஆக உயர்ந்திருக்கிறது.

தமிழகத்தில் இன்று 5,517 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,96,483 ஆக உள்ளது. தற்போது 56,998 பேர்  சிகிச்சையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.