24 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா..ஷாக் கொடுத்த பலி எண்ணிக்கை : இன்றைய தமிழக நிலவரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 January 2022, 8:12 pm
TN Corona - Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் மேலும் 23,459 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன்படி தற்போது புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரவு ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்றைய பாதிப்பு 20,911 ஆக இருந்த நிலையில்,இன்று 23,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 28,91,959 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 9,026 பேர் குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் மொத்தம் 27,36,986 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,956 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 8963 பேரும், செங்கல்பட்டில் 2504 பேரும், கோவை 1564 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 117

0

0