தமிழகத்தில் ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ பாஸ் வினியோகம்…! விண்ணப்பிக்கும் நபர்களும் அதிகரிப்பு

18 August 2020, 11:51 am
Quick Share

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 1.20 லட்சம் பேருக்கு இ பாஸ் வழங்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. பரவலை தடுக்க அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் தொற்றுகள் குறையவில்லை.

பாதிப்புகள் ஒரு பக்கம் அதிகரித்தாலும் குணம் அடைவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்த மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க இ பாஸ் கொண்டு வரப்பட்டது.

இ பாஸ் பெற விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அது கிடைக்காததாலும், பாஸ் பெற்று தர இடைத்தரகர்கள் அதிகரித்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. அது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆகையால் இ பாஸ் நடைமுறைகளை நீக்கவோ, எளிமைப்படுத்தவோ வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது. ஆகையால் இ பாஸ் நடைமுறைகளில் புதிய தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி ஆகஸ்ட் 17  முதல்  இ பாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தலைநகர் சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்தது.  நேற்று ஒரு நாள் மட்டும் 1.20 லட்சம் பேருக்கு இ பாஸ் வழங்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு கூறி உள்ளது.

Views: - 35

0

0