மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது..! முதலமைச்சர் அறிவிப்பு
3 August 2020, 10:40 amசென்னை: புதிய கல்விக்கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கை குறித்து மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு ஆதரவும்,எதிர்ப்பும் இருந்து வருகிறது.
தமிழகத்திலும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இதுதொடர்பான திமுகவும், அதன் கூட்டணியினரும் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளது. அதில் புதிய கல்வி கொள்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரி இருந்தன.
இந் நிலையில் புதிய கல்வி கொள்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், செங்கோட்டையன் பங்கேற்றனர். அதிகாரிகளும் இடம்பெற்று இருந்தனர்.
புதிய கல்வி கொள்கையின் அம்சங்கள், எதிர்க்கட்சிகள் கடிதம், பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன் பிறகு தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் எக்காரணம் கொண்டு புதிய கல்விக் கொள்கையின்படி தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அனுமதிக்கப்படாது, இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசின் முழு அறிக்கையின் விவரம் வருமாறு: