தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி சென்னை வந்தார்

Author: Udhayakumar Raman
16 September 2021, 9:31 pm
Quick Share

சென்னை: தமிழகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர். என் ரவி விமானம் மூலம் இன்று சென்னை வந்தடைந்தார்.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது அவர் பஞ்சாப் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி சென்னை வந்தடைந்தார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர். தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரும் உடன் இருந்தனர்.தமிழகத்தின் 25-வது ஆளுநராகஅவருக்கு உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி 18-ம் தேதி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார்.

Views: - 249

0

0