வாரத்தில் 3 நாட்களுக்கு வழிபாட்டுத் தலங்களில் அனுமதி கிடையாது… தடையை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு…!!
Author: Babu Lakshmanan25 August 2021, 11:29 am
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வாரத்தில் 3 நாட்களுக்கு வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் சில மாவட்டங்களில் பாதிப்பு குறையவே இல்லை. மேலும், 3வது அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
நேற்று முதல் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வழிபாட்டு தலங்கள் பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதனால், பொதுமக்கள் குழப்பம் அடைந்திருந்தனர்.
இந்த நிலையில், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கான தடை தொடர்ந்து
அமலில் இருக்கும் என தமிழக மருத்துவத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது. பள்ளிகள் திறந்து ஒருவாரம் கழித்து கொரோனா குறைந்திருந்தால் வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து முடிவெடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0