கேரளாவைப் போன்று தமிழகத்திலும் ஆன்லைனில் மதுவிற்பனையா…? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!!

Author: Babu Lakshmanan
7 September 2021, 3:50 pm
Quick Share

தமிழகத்தில் ஆன்லைனில் மதுவிற்பனை செய்யப்படுமா..? என்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி இது தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதியம் வழங்கப்படும் என அவர் அறிவித்தார். அரசின் இந்த முடிவால், ஆண்டொன்றுக்கு கூடுதலாக ரூ.15 கோடி செலவாகும் என்றும், மாத தொகுப்பூதியம் ரூ.500 கூடுதலாக வைத்து ஏப்ரல் 2021 முதல் உயர்த்தி வழங்கப்படும் எனக் கூறினார்.

மேலும், தேனி மாவட்டத்தில் 500 மெகா வாட் நீரேற்று சேமிப்பு புனல் மின்நிலையம் அமைக்கப்படும் என்றும், கன்னியாகுமரி மாவட்டம் கோதையாரில் 500 மெகா வாட் நீரேற்று சேமிப்பு புனல் மின்நிலையம் அமைக்கப்படும் என அவர் கூறினார். அதேபோல, உடன்குடி விரிவாக்கத் திட்டம் நிலை 2, உடன்குடி விரிவாக்கத் திட்டம் நிலை 3 ஆகிய அனல் மின் உற்பத்தி திட்டங்களை செயலாக்கத்திற்கு கொண்டுவர ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

வடசென்னையைத் தொடர்ந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 71,000 டன் நிலக்கரியை காணவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், நிலக்கரி மாயமானது குறித்து விசாரிக்க கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட குழு, அந்த இடத்திற்கே போகவில்லை என்றும் அவர் கூறினார்.

Views: - 318

0

0