இன்று கோகுலாஷ்டமியா.. இல்லையா…? குழப்பங்களுக்கு தீர்வு..!

11 August 2020, 11:33 am
Janamashtmi-updatenews360
Quick Share

கிருஷ்ண ஜென்மாஷ்டமி விரதத்தைவிட ஜயந்தீ விரதம் என்பது தனியாகும். ஜன்மாஷ்டமி விரதத்தில் திதியே நிமித்தமாகும். ஜயந்தி விரதத்தில் ரோஹிணி நக்ஷத்திரத்தின் சம்பந்தம் நிமித்தமாகும்.

ச்ராவண மாதத்தில் க்ருஷ்ண பக்ஷத்தில் கிருஷ்ணஜன்மாஷ்டமி விரதத்தை எந்த மனிதன் செய்யவில்லையோ அவன் கொடிய ராட்சசனாக ஆகிறான். ச்ராவண மாதத்தின் கிருஷ்ண பட்ச அஷ்டமியில் ரோஹிணி நட்சத்திரம் சேருமாகில் அந்த தினம் ஜயந்தி எனப்படுகிறது.

வஸிஷ்ட ஸம்ஹிதையில் ச்ராவண மாதத்திலோ, ப்ரௌஷ்டபத மாதத்திலோ கிருஷ்ணாஷ்டமி ரோஹிணி நட்சத்திரத்துடன் கூடியதாய் மனிதர்களால் அடையப்பட்டால் அது ஜயந்தி எனச் சொல்லப்பட்டுள்ளது. ச்ராவண மாதத்தில் அஷ்டமியும், ரோஹிணியும் சேராவிட்டால் ப்ரௌஷ்டபத மாதத்தில் அவசியம் சேர்க்கையுண்டாகும்.

அவ்விரண்டும் மாதங்களிலும் சேர்க்கை இல்லாவிடில் அந்த வருஷத்தில் பிறகு உண்டாகாது. ஸ்ம்ருதி முக்தா பலம் திதி நிர்ணய காண்டத்தில் முதல் விதி இது. அதாவது கோலாஷ்டமி என்று இரண்டாவது விதியின்படி ச்ராவண மாதத்தில் என்பது முதல் பட்சம். ப்ரௌஷ்டபத மாதத்தில் என்பது இரண்டாவது பட்சம்.

ப்ரௌஷ்டபத மாதத்தில் கிருஷ்ணபட்ச அஷ்டமி ரோஹிணியுடன் கூடியதனால் அது ஜயந்தி என்ற பெயருள்ளதாகும். அபிஜித் என்ற நக்ஷத்திரம் ஜெயந்தி என்ற இரவு, விஜயம் என்ற முகூர்த்தம் ஆகியவைகளில் கிருஷ்ணன் பிறந்தார்.
இவ்விடத்தில் ச்ராவண, நபஸ்ய, ப்ரௌஷ்டபத என்ற சப்தங்கள் ஸிம்ஹ ச்ராவணம் முதலியவைகளைக் குறிக்கின்றவையாகும்.

ச்ராவண மாதத்திலோ, சூர்யன் சிம்ம ராசியிலிருக்கும் போது ஜெயந்தி விரதத்தைச் செய்ய வேண்டும். சூர்யன் கடக ராசியிலாவது, கன்யா ராசியிலாவது இருக்கும் பொழுது செய்யக்கூடாது. அதேபோல், ஆவணி அவிட்டம் ஆவணி மாதத்தில் வராமல் ஆடி மாதத்தில் வந்து உள்ளது தவறு என்று செய்திகள் வர ஆரம்பித்துள்ளது.

அடிப்படையாக ஒரு விஷயம் என்னவென்றால், பண்டிகைகள் சாந்திரமாண முறைப்படி கணக்கிடப்படுகின்றன.
அதன்படி, கடந்த 23.07.2020 அன்று சிராவண மாதம் ஆரம்பித்து விட்டது. அதன்படி, 03.08.2020, 04.08.2020 அன்று நடைப்பெற்று முடிந்த காயத்ரி ஜபம் சரியே. இதே விதியைப் பின்பற்றித்தான் கோகுலாஷ்டமியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.11.08.2020 என்று குறிப்பிட்டுள்ளது தவறேயில்லை. சரியாக உள்ளது.

கோகுலாஷ்டமி என்பது சிராவண பகுள அஷ்டமி என்று நள்ளிரவிள் உள்ளதோ அன்றுதான் கோகுலாஷ்டமி.
அதன்படி இந்த வருடம் 11 – 8 – 2020 ஆன இன்றுதான் வருகின்றது. ஆகையால் அன்றுதான் கோகுலாஷ்டமி தினம் கொண்டாடப்பட வேண்டும்.

இத்தகைய வாதங்கள் அடிப்படையில் கோகுலாஷ்டமி குழப்பத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

Views: - 4

0

0