மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் : இன்று ஒரே நாளில் ரூ.736 உயர்ந்து விற்பனை!!

18 August 2020, 11:22 am
Gold Rate - Updatenews360
Quick Share

சென்னை : கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று காலையிலும் குறைந்தே காணப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக, அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், திருமணம் உள்ளிட்ட எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளும் நடத்துவது குறைந்துவிட்டது. அப்படி மீறி நடந்தாலும் எளிய முறையில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தங்கம் வாங்குவது குறைந்து, அதன் இறக்குமதியும் குறைந்துவிட்டது.

இருப்பினும், வர்த்தக வரலாற்றில் இல்லாத அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றது. இது பொதுமக்களின் தங்கம் வாங்கும் திறனை முற்றிலும் அழித்து விட்டதாக உள்ளது. தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக இறங்கி வந்த தங்கத்தின் விலை, இன்று திடீரென புதிய உச்சத்தை தொட்டது.

இன்று காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ. 92 குறைந்து ரூ. 5,167 ஆக விற்பனையானது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.736 ரூ. 41,336 க்கும் விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.30க்கும், வெள்ளி கிலோவுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.76,300-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 24

0

0