நீட் தேர்வு 2021: ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!!

Author: Aarthi Sivakumar
10 August 2021, 8:43 am
Quick Share

புதுடெல்லி: 2021ஆம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் அவகாசம் முடிவடைகிறது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு தேர்வு மையங்களை அதிகரித்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பின்னர் தேர்வு நடத்தப்பட்டது.

NEET -Updatenews360

தேர்வு தாமதமாக நடத்தப்பட்டதால் கடந்த ஆண்டில் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கையும் தாமதமானது. இந்நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நாடு முழுவதும் வருகிற செப்டம்பர் மாதம் 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த ஜூலை 13ம் தேதி முதல் https://ntaneet.nic.in/ என்ற இணையதளத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NEET_2021_UpdateNews360

அதேபோல நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய ஆகஸ்ட் 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதிவரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பம் பதிவு செய்வதற்கான கால அவகாசமும் இன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 205

0

0