நாளை முழு ஊரடங்கு.. சமூக இடைவெளியை மறந்து மார்க்கெட்டுகளில் குவிந்த மக்கள்…!

1 August 2020, 2:29 pm
Quick Share

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருப்பதால் கடைகளில் இன்றே பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.

கொரோனா காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. கொரோனா கட்டுக்குள் வராததால், ஊரடங்கு  நீட்டிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

அதன்படி, 7வது கட்ட  ஊரடங்கு வரும் 31ம்  தேதி வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாதத்தின் 5 ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, நாளை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமைக்கு தேவையான மீன், இறைச்சி போன்றவற்றை வாங்க மக்கள் இன்றே  கடை வீதிகளில் குவிந்தனர்.

சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் தனி மனித இடைவெளியை மறந்து குவிந்தனர். இதேபோன்று மதுரை, சேலம், கோவை என பல பகுதிகளிலும் மார்க்கெட்டுகளில், கடைகளில் மக்கள் பொருட்களை வாங்க குவிந்தனர்.

நாளை முழு ஊரடங்கின் போது மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் மட்டுமே செயல்படும். காய்கறி, மளிகை கடைகள் அனைத்து கடைகளும் அடைக்கப்படும். வாகனங்கள் எதுவும் இயங்காது.

மக்கள் வீடுகளில் இருந்து வெளியில் வரக்கூடாது. அறிவிக்கப்பட்டுள்ள விதிகள் படி முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Views: - 0

0

0