தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவு

3 September 2020, 10:13 pm
TN Assemble 02 updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட எஸ்பி.பிரவேஷ்குமார் சென்னை ரயில்வே எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை ரயில்வே எஸ்பியாக இருந்த மகேஷ்வரன் சென்னை பூக்கடை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை பூக்கடை துணை ஆணையராக இருந்த கார்த்திக் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் நகர காவல்துறை துணை ஆணையராக இருந்த செல்வகுமார் வேலூர் மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். எஸ்பி.வருண்குமார் டிவிட்டரில் வெளியிட்டிருந்த பதிவு காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமநாதபுரத்தில் அருண்பிரகாஷ் என்பவர் கொலை தொடர்பாக வருண்குமார் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

Views: - 10

0

0