25ம் தேதி முதல் பேருந்து ஊழியர்கள் ஸ்டிரைக் : தமிழகம் முழுவதும் பேருந்துகள் ஓடாது..!!!

23 February 2021, 4:33 pm
tn bus - updatenews360
Quick Share

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் 25ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி மற்றும் ஓய்வூதியப் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போக்குவரத்து சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதனால், அன்றைய தினம் மூலம் பேருந்துகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 14

0

0