2 அழகிகளுடன் அரைகுறை ஆடையில் கூத்து… திமுக ஒன்றிய செயலாளர் அறையில் நடந்த ஆடல், பாடல் நிகழ்ச்சி… லீக்கான வீடியோவால் பரபரப்பு…!!

Author: Babu Lakshmanan
1 July 2022, 2:00 pm
Quick Share

திருச்சி மாவட்டம் அந்த நல்லூரில் திமுக ஒன்றிய செயலாளர் அறையில் நடந்த அரை நிர்வாண நடனம் காட்சிகள் லீக் ஆகி பரப்பரப்பை ஏற்படுத்திய வருகிறது.

மதுரை தென்பழஞ்சியை சேர்ந்த தங்கமாயன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் “மதுரை தென்பழஞ்சி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு ஆஸ்டின்பட்டி காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இதனால் குதிரை எடுப்பு திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.

High_Court_Madurai_UpdateNews360

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, ”ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக தமிழக டிஜிபி 9.4.2019-ல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்பதில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உரிய தகவல்களுடன் 15 நாட்களுக்கு முன்பு அனுமதி கேட்டு மனு அளிக்க வேண்டும். மனு அளித்த நாளிலிருந்து ஒரு வாரத்தில் முடிவு தெரிவிக்க வேண்டும்.

நிகழ்ச்சியில் ஆபாசமான அசைவுகள், வசனங்கள் இருக்கக் கூடாது. சாதி, மத, இன, மொழி அடிப்படையில் பிரச்சினையை உருவாக்கும் வகையில் பேசக் கூடாது. அவ்வாறு பேசினால் நிகழ்ச்சியை போலீசார் எந்த நேரமும் நிறுத்தலாம். இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு போலீஸார் அனுமதி வழங்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முன் அனுமதியுடன் ஆடல்பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கு இடையில் திருச்சியில் உள்ள சேர்ந்த எம்.எல்.ஏ. மகன் அந்த தொகுதியில் நடைபெற்ற ஆடல்பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பொது இடங்களில் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச அசைகளுக்கு தடைவிதித்து இருப்பதால், தனிப்பட்ட முறையில் ரசிப்பதற்கு என்று ஆடல்பாடல் குழுவினரை ஒரு அறைக்கு அழைத்து வந்து திருச்சியில் உள்ள ஆளும்கட்சி முக்கிய மஞ்சள் சட்டை புள்ளி உள்ளிட்ட சிலர் நடத்தி ரசித்து இருக்கிறார்கள். தற்போது அங்கே எடுக்கப்பட்ட செல் போன் வீடியோ தற்போது லீக் ஆகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

யார் அந்த மஞ்சள் சட்டை விஐபி என்று பலர் தங்களுக்குள் விசாரித்து வருகின்றனர். இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1313

1

0