ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி… சொந்தக் கட்சிக்காரரையே தோற்கடித்த திமுக வேட்பாளர் : திருச்சியில் சுவாரஸ்யம்..!!
Author: Babu Lakshmanan12 October 2021, 1:43 pm
திருச்சி : திருச்சியில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர், சொந்த கட்சியை போட்டியாளரை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்த சம்பவம் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் இருகட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் 24 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 3 ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 2 கிராம ஊராட்சித் தலைவர்கள் என மொத்தம் 24 பதவியிடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில், 74.08 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், லால்குடி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுமருதூர் ஊராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ஆர்.கடல்மணி 424 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கன்னியம்மாள் 423 வாக்குகள் பெற்று, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். திமுகவைச் சேர்ந்த இருவர் தேர்தலில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி, தோல்வியை கண்டிருப்பது அப்பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
0
0