3 நாட்களுக்கு அரைக்கம்பத்தில் தேசிய கொடி…! டிரம்ப் அறிவிப்பு

22 May 2020, 12:53 pm
Trump_UpdateNews360
Quick Share

வாஷிங்டன்: கொரோனா பலியின் நினைவாக அமெரிக்க தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது வரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 96,354 பேர் ஆகும். 16,20,902 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. இந்நிலையில், ஒரு முக்கிய அறிவிப்பை அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸால் இழந்தவர்களின்  நினைவாக அடுத்த 3 நாட்களுக்கு அனைத்து அரசு கட்டிடங்கள் மற்றும் தேசிய நினைவுச் சின்னங்களில் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என்று அறிவித்தார்.

அடுத்தடுத்த டுவீட்டில், திங்களன்று, நம் தேசத்திற்காக உச்சகட்ட தியாகத்தை செய்த நமது ராணுவத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களின் நினைவாக கொடிகள் அரை கம்பத்தில் பறக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

Leave a Reply