‘ரஜினிக்கு அந்தத் தகுதியில்லை’ : திமுக எம்பி கனிமொழி கிண்டல்..!!

4 November 2020, 8:16 pm
rajini - kanimozhi updatenews360
Quick Share

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடலையூரில் திமுக சார்பில் குறைகேட்கும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு உரையாற்றினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நடிகர்கள் (ரஜினிகாந்த்) அரசியல் கட்சி ஆரம்பிப்பது பற்றியும், அரசியலுக்கு வருவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு அவர் பதிலளித்ததாவது :- ரஜினி எங்கங்க கட்சி ஆரம்பிக்கப் போறாரு..? ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும், தங்களை எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம். அதைப்பற்றி யாருக்கும் அக்கறை இல்லை. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். யாரும் அதை தடுக்கும் எண்ணமும் கிடையாது. இந்த மண்ணின் அடிப்படை கொள்கைகளை புரிந்து கொண்டு, மக்களின் உரிமைகளுக்காக பாடுபடக் கூடியவர்களால் மட்டுமே ஆட்சி பொறுப்பேற்க முடியும். தமிழக மக்களும் அதனை உணர்ந்துள்ளனர். தமிழக உரிமைகள், தமிழ் மக்களின் சுயமரியாதையை பாதுகாக்க கூடியவர்கள்.

அடுத்த தலைமுறைக்கான உரிமைக்காக பாடுபடக் கூடியவர்கள்தான் ஆட்சி பொறுப்புக்கு வர முடியும் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். அது, திமுகதான், எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 35

0

0