பிரதமர் மோடி குறித்து அவதூறு… தனியார் டிவி நிகழ்ச்சியில் கைகலப்பு… பாஜக – விசிகவினரிடையே அடிதடி… பாதியில் நிறுத்தப்பட்ட நிகழ்ச்சி…!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
19 May 2022, 9:35 pm
Quick Share

சென்னை : தனியார் விவாத நிகழ்ச்சியில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பொதுவாக, தற்போதைய அரசியல் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து விவாத நிகழ்ச்சிகளை தனியார் செய்தி நிறுவனங்கள் நடத்துவது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில், திமுகவின் ஓராண்டு நிறைவையொட்டி, சிறப்பு விவாத நிகழ்ச்சிக்கு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

அதில், திமுக, அதன் கூட்டணி கட்சிகளான விசிக உள்ளிட்டவற்றிற்கும், பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, அழைப்பு விடுக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் சார்பில் அக்கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து தரக்குறைவாக பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பார்வையாளர்கள் பக்கம் அமர்ந்திருந்த பாஜக தொண்டர்கள், விசிகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், கைகலப்பு ஏற்பட்டது. இதனால், அந்த அரங்கில் பதற்றம் ஏற்பட்டது.

சிறிது நேரம் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு, இரு கட்சியினரிடையே சமாதானம் பேச்சு நடைபெற்றது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்க்கும் இரு கட்சியினர் டுவிட்டரில் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 416

0

0