கேள்வி கேட்ட பெண்ணை அறையில் அடைத்த பவுன்சர்கள்.. தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் அதிர்ச்சி!
Author: Udayachandran RadhaKrishnan30 செப்டம்பர் 2024, 11:58 காலை
தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் கேள்வி கேட்ட பெண்ணை கண்ணாடி அறையில் பவுன்சர்கள் அடைத்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
தஞ்சாவூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கும்பகோணத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டார்.
அப்போது புஸ்ஸி ஆனந்த் பேசிகி கொண்டிருந்த போது, கூட்டத்தில் இருந்து பெண் அவரிடம், என் அண்ணன் சொத்து வித்து விஜய் மக்கள் இயக்கத்தை வளர்த்தார், ஆனால் அவரை ஏன் கட்சியை விட்டு நீக்கியுள்ளீர்கள் என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து அங்கிருந்த பவுன்சர்கள் அந்த பெண்ணை கண்ணாடி அறையில் அடைத்து வைத்தனர். மேலும் இந்த சம்பவங்களை வீடியோ எடுக்க முடியாதபடி செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதையும் படியுங்க: லெஸ்பியனில் விருப்பம்.. பள்ளி மாணவிக்கு ‘டார்ச்சர்’ கொடுத்த ஆசிரியை.. அதிர்ச்சி சம்பவம்!
ஆனால் செய்தியாளர்கள் வீடியோ எடுக்க முற்பட்ட போது, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணையில் வாக்குவாதம் செய்தது தஞ்சை மாவட்ட தலைவராக இருந்த தங்கதுரையின் தங்கை புஷ்பா என்பது தெரியவந்தது. மேலும் தங்கதுரை தனது நிலத்தை விற்று விஜய் மக்கள் இயக்கத்துக்காக செலவு செய்து வந்துள்ளதும், கட்சி தொடங்கிய பின் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதால் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார் தங்கதுரையின் தங்கை என்பதும் தெரியவந்தது.
0
0