தவறான வரைபடம் வெளியிட்ட விவகாரம்: இந்தியாவிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரியது ட்விட்டர் நிறுவனம்…!!

18 November 2020, 7:57 pm
twitter - updatenews360
Quick Share

புதுடெல்லி: லடாக்கினை சீனாவின் பகுதியாக சித்தரித்து தவறான இந்திய வரைபடம் வெளியிட்ட விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனம் இந்திய அரசிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான லடாக்கினை சீனாவின் பகுதியாக சித்தரித்து தவறான இந்திய வரைபடம் வெளியிட்ட விவகாரத்தில் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் நிறுவனம் இந்திய அரசிடம் மன்னிப்புக் கோரியது.

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேஹி தலைமையிலான எம்.பிக்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவானது, ட்விட்டரின் தவறான வரைபடத்திற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தது.

மேலும், ட்விட்டரின் இந்த செயல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது எனவும் கிரிமினல் குற்றத்திற்கு ஒப்பானது எனவும் கடுமையாக சாடியிருந்தது. அதன் தொடர்ச்சியாக டுவிட்டா் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியான ஜாக் டோா்ஸிக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப துறை செயலா் அஜய் சாஹ்னி கடிதமும் எழுதியிருந்தார்.

இந்நிலையில் தவறான இந்திய வரைபடம் வெளியிட்ட விவகாரத்தில் ட்விட்டர் நிறுவனம் இன்று இந்திய அரசிடம் எழுத்துப் பூர்வமாக மன்னிப்புக் கோரியது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் மன்னிப்புக் கோரப்பட்டுள்ளதுடன், இந்த தவறினை இம்மாத இறுதிக்குள் சரிசெய்து விடுவதாகவும் ட்விட்டர் நிறுவனம் உறுதியளித்துள்ளது.