#முத்துமனோவிற்கு_நீதி_எங்கே… விசாரணை கைதி கொலைக்கு உடந்தையான சிறைத்துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
27 June 2021, 3:03 pm
muthumano - updatenews360
Quick Share

நெல்லை : பாளையங்கோட்டை சிறையில் விசாரணைக் கைதி முத்துமனோ கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சிறைத்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறை வளாகத்தில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளத்தை சேர்ந்த பாவநாசம் என்பவரின் மகன் முத்துமனோ கடந்த 22-ம் தேதி கொலை செய்யப்பட்டார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

விசாரணைக் கைதி கொலை சம்பவம் தொடர்பாக துணை சிறை அலுவலர் சிவனு உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சிறை உயர் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிய வலியுறுத்தி முத்துமனோவின் உடலை வாங்கமறுத்து வாகைகுளம் கிராமத்தில் உறவினர்களும், அக்கிராமத்தினரும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விசாரணை கைதி கொலைக்கு உடந்தையான சிறைத்துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி #முத்துமனோவிற்குநீதிஎங்கே.. என்னும் ஹேஷ்டேக்கை சமூகவலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 287

0

0