கா்ப்பிணிகளுக்கு ஹெல்த் கிட் வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக பாஜக தலைவா் அண்ணாமலை குற்றம் சுமத்தி உள்ளாா்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசு சார்பில் அம்மா நியூட்ரிஷியன் கிட் கொடுக்கப்பட்டு வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா பெயர் நீக்கப்பட்டு நியூட்ரிஷன் கிட் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து திட்டத்திற்காக 23.88 லட்சம் கிட்களை அரசு கொள்முதல் செய்கிறது.
ஹெல்த் மிக்ஸ் வழங்குவதில் தமிழக அரசுக்கு ரூ.45 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஆவின் ஹெல்த் மிக்ஸ் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், ஏப்ரல் மாதம் சிலரது நிர்பந்தம் காரணமாக மறுபடியும் ஆவின் ஹெல்த் மிக்ஸ் நீக்கப்பட்டு தனியார் நிறுவனத்தின் மிக்ஸ் சேர்க்கப்பட்டது.
ஆவினில் வாங்காமல் அனிதா டெக்ஸ்காட் என்ற தனியார் நிறுவனத்திடம் வாங்கியதால் ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜீ-ஸ்கொயர் நிறுவனத்தின் வளர்ச்சி கழகமாக சிம்டிஏ மாறியுள்ளது.
இந்த நிறுவனம் நிலம் அப்ரூவலுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் ஒரு மணி நேரம் ஆன்லைன் லிங்க் செயல்பாட்டில் உள்ளது. பிறகு செயல்படாமல் போகிறது. இந்த நிறுவனம் 15 திட்டங்களை செய்து முடித்துள்ளது.
புதிதாக 6 நிறுவனங்களை ஜீ-ஸ்கொயர் நிறுவனம் வாங்கியுள்ளது. கட்டுமான திட்டங்கள் ஜீ-ஸ்கொயர் நிறுவனத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி செயல்படுகிறார் கோவையில் 122 ஏக்கருக்கான அனைத்து ஒப்புதல்களையும் அந்த நிறுவனம் 8 நாட்களில் பெற்றுள்ளது” என்றார்.
இந்த நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இன்னும் டெண்டர் விடவே இல்லை.. இன்றும் இரண்டு நாட்களில் விடப்பட உள்ள டெண்டர் குறித்து புகார் அளித்துள்ளார். இது ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.