உதயநிதி அருவறுப்பு பேச்சு:வலுக்கும் பெண்கள் எதிர்ப்பு!பதறித் துடிக்கும் திமுக!!

14 January 2021, 9:01 pm
Udhayanithi- Updatenews360
Quick Share

43 வயதாகும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி அண்மையில் ஒரு கூட்ட மேடையில் பேசும்போது போகிறபோக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை கேலி பேசுவதாக நினைத்து அருவறுப்பான சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

Psycho' star Udhayanidhi Stalin pledges not to do politics in cinema |  Tamil Movie News - Times of India

இரட்டை அர்த்தம் தொனிக்கும் விதமாக பேசுவது தனக்கு கைவந்த கலை என்பதுபோல், தன் அருகில் இருந்தவர்களைப் பார்த்து அப்போது அவர் பலமாக சிரிக்கவும் செய்தார்.

இப்படி தனக்குத் தானே சிரித்து, நக்கல் அடித்துக்கொண்டே பெண்களை கண்ணியக் குறைவாக உதயநிதி பேசியது தமிழகம் முழுவதும் பெண்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Udhayanidhi Stalin, son of MK Stalin, appointed Secretary of DMK's youth  wing | India News – India TV

பல்வேறு கட்சிகளை சேர்ந்த மகளிரணி தலைவிகளும், பெண்ணிய அமைப்பினரும் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யும்படி அதிமுக மகளிர் அமைப்பினர் போலீசிலும் புகார் செய்துள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்துக்கு உதயநிதி செல்லும் இடங்களில் எல்லாம் அதிமுக மகளிர் அணியினரும், பெண்கள் அமைப்பினரும் அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Udhayanidhi Stalin claims remarks on Sasikala-EPS taken out of context,  expresses regret | The News Minute

பொதுவாக இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் சில நாட்களில் அடங்கிவிடும். ஆனால் இந்த போராட்டம் சற்றும் ஓய்ந்ததாக தெரியவில்லை. கடந்த நான்கைந்து நாட்களாக உதயநிதி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் அவரை குறிவைத்து அதிமுக மகளிர் அணியினர் தீவிர ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் தற்போது வேறு வடிவில் விசுவரூபம் கண்டுள்ளது.
உதயநிதியை கண்டித்து சென்னை மதுரை கோவை திருச்சி சேலம் என தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் போராட்டம் வேகமாக பரவி வருகிறது.

DMK demands CBI inquiry into TNPSC job recruitment exam

நகரின் முக்கிய இடங்களில் ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக மகளிர் அணியினர் திரண்டு உதயநிதிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும் வருகிறார்கள்.

இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் கட்சிக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பு பெண்களும் அதிகளவில் கலந்து கொள்வதுதான்.

இந்த போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கையில் துடைப்பம் ஏந்தி “பெண்களை இழிவாக பேசிய உதயநிதியே, மன்னிப்பு கேள்’என்ற கோஷத்தையும் எழுப்புகிறார்கள்.

பொது இடங்களில் இவர்கள் நடத்தும் இந்த நூதன போராட்டம் மக்களை கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

பெண்களைப் பற்றி உதயநிதி கண்ணியக் குறைவாகவும், அருவறுக்கத்தக்க வகையிலும் அப்படி என்னதான் பேசி இருப்பார் என்ற கேள்வியையும் இது எழுப்பி இருக்கிறது.

குறிப்பாக பெண்கள் இதுபற்றி அதிக அளவில் விவாதிக்க தொடங்கிவிட்டனர். இப்பிரச்சினை தற்போது பெண்களிடையே பெரும் பேசுபொருளாகவும் மாறிவிட்டது. இதனால் உதயநிதியின் பேச்சை பெண்கள் ரசிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

மாவட்டத் தலைநகரங்களில் மட்டுமே நடந்த இந்த போராட்டம் தற்போது சட்டப்பேரவை தொகுதி வாரியாக நடக்க ஆரம்பித்துள்ளது. இதனால் திமுக மகளிர் அணியினர் மிகவும் கலக்கமடைந்து இருக்கின்றனர். அதிமுக மகளிர் அணியினரும் பெண்கள் அமைப்பினரும் செய்யும் பிரச்சாரத்திற்கு தகுந்த பதில் கொடுக்க முடியாமல் தடுமாறியும் வருகிறார்கள்.

சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்களிடம் இப்பிரச்சினையை பற்றி விளக்கி பேசுவது சிக்கலையே ஏற்படுத்தும் என்றும் திமுக மகளிர் அணியினர் கருதுகின்றனர்.

அதிமுக மகளிர் அணியின் இந்தப் போராட்டம் நீடித்துக் கொண்டே போனால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களின் ஓட்டு கணிசமான அளவில் திமுகவுக்கு விழாது என்பதையும் அவர்கள் புரிந்து வைத்துள்ளனர்.

உதயநிதியின் கண்ணியக் குறைவான பேச்சு தமிழகப் பெண்கள் இடையே ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து அவர்கள் திமுக மேலிடத்திற்கு ஒரு அறிக்கையும் தயாரித்து அனுப்பி வைத்துதள்ளதாக தெரிகிறது.

அந்த அறிக்கையில் ” சசிகலாவை சீண்டும் விதமாக உதயநிதி அருவறுக்கத் தக்க வகையில் பேசியது தமிழகத்தில்
அனைத்து தரப்பு பெண்களையும் முகம் சுழிக்க வைத்து இருக்கிறது. படித்தவர், படிக்காதவர், பாமரர் என்று எவருமே உதயநிதியின் பேச்சை நியாயப்படுத்தவில்லை. பெண்களில் சுமார் 90% பேர் உதயநிதி ஒரு பக்குவப்பட்ட தலைவர் போல் பேசவில்லை என்று கருத்து தெரிவிக்கிகிறார்கள். இது வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலித்தால் நமக்கு நிச்சயம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை படித்த ஸ்டாலின் அதிர்ந்து போயிருக்கிறார் என்கிறார்கள்.
திமுகவின் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் இது என்ன புதிய தலைவலி? என்று திக்குமுக்காடிப் போய் நிற்பதாகவும் பேசப்படுகிறது.

Prashant Kishor accused of plagiarism, taken to court by 'Congress'  strategist Sashwat Gautam

இதுகுறித்து மூத்த அரசியல் விமர்சகர் ஒருவர் விரிவாக கூறுகையில், “பெண்களை கண்ணியக் குறைவாக பேசுவது கருணாநிதி காலத்திலிருந்தே உள்ளது. அண்ணாவிடம், கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் பெண் தலைவர்களில் ஒருவரான டி.என். அனந்தநாயகியிடம் அவர் இரட்டை அர்த்தத்தில் பதில் அளித்ததாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.
1989 மார்ச் மாதம் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டார். அப்போது முதல்வராக இருந்தவர் கருணாநிதிதான்.

Outlook India Photo Gallery - AIADMK

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்பர் கூட்டம் என்னும் அமைப்பு இந்து மத பெண் தெய்வங்களை அவமதித்து யூ டியூப்பில் வீடியோ வெளியிட்டபோது அதன் பின்னணியில் திமுக தொழில் நுட்ப பிரிவினரில் சிலர் இருந்ததாக கூறப்பட்டது. இதை மறுத்த ஸ்டாலின் கருப்பர் கூட்டத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார். எங்களது கட்சியில் இந்து மதத்தை சேர்ந்த ஒரு கோடி பேர் இருக்கின்றனர் என்றும் கூறினார். ஆனால் கடைசி வரை அவர் கருப்பர் கூட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கவே இல்லை.

கருப்பர் கூட்டத்திற்கு அடுத்த ஆப்பு.. அதிரடி காண்பிக்கும் சைபர் கிரைம்..!!  - Seithipunal

அடுத்து மனுஸ்மிருதியில் இந்து மத பெண்கள் அனைவருமே விபச்சாரிகள் என்று கூறப்பட்டிருக்கிறது என திமுக கூட்டணி கட்சியின் தலைவரான திருமாவளவன் பேசியபோது அதையும் ஸ்டாலின் கண்டிக்கவில்லை. மாறாக திருமாவளவனுக்கு ஆதரவாகத் தான் கருத்து தெரிவித்தார்.

Thol Thirumavalavan: More than 95 Dalits were not allowed to vote in TN

அண்மையில் திமுக நடத்திய மக்கள் கிராமசபை கூட்டம் ஒன்றில் அங்கிருந்த பெண்களைக் கண்டு உங்களை நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது என்று ஸ்டாலின் சொன்னார். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.

Thalapathy MK Stalin Becomes DMK Boss Amid Threats From Brother Alagiri

அந்த வழியில்தான் இப்போது உதயநிதியும் திருவாய் மலர்ந்திருக்கிறார். ஆக இதுபோன்ற விஷயத்தில் தாத்தா, மகன், பேரன் என அனைவருமே ஒரே நேர்கோட்டில் இருப்பது தெரிகிறது. இப்படி பெண்களை கண்ணியக் குறைவாக பேசுவதை திமுக
நிறுத்தாமல் போனால் தேர்தலில் அவர்களுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும். இந்த எதிர்மறை பேச்சு மூலம் தனக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என்று உதயநிதி கருதுகிறார். அதற்காகவே அவர் இப்படி பேசுகிறார் என்று தோன்றுகிறது. ஆனால் நிச்சயம் இது பெண்களிடையே எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும்.

50 சதவீதம் உள்ள பெண்களில் 30 சதவீதம் பேர் உதயநிதியின் பேச்சு பற்றி சிந்திக்க ஆரம்பித்தால் கூட திமுகவுக்கு ஓட்டுப்போட தயங்குவார்கள். தேர்தல் நேரத்தில் இதையெல்லாம் மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைத்தால் அது மிக மிகத் தவறு.
இதை திமுக புரிந்து கொள்வது நல்லது” என்று நெற்றியடியாக கூறினார்.

Udhayanidhi factor behind dist secretaries' meet at Anbagam - DTNext.in

இனியாவது உதயநிதி அடக்கி வாசிக்கவேண்டும் என்று பதறும் திமுக உடன் பிறப்புகளின் வேதனை முணுமுணுப்பும் காதுகளில் விழுகிறது.

Views: - 18

0

0