ஸ்டாலினுக்கு தந்தை கருணாநிதி கொடுத்த கவுரவம் : குடும்பத்தினர் வழங்கிய கிஃப்ட்… கொண்டாடும் தொண்டர்கள்…!!!

7 May 2021, 6:19 pm
Quick Share

முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அவரது குடும்பத்தினர் பரிசு ஒன்றை வழங்கினர்.

தமிழகத்தின் முதலமைச்சராக முதல்முறையாக திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, ஸ்டாலினுக்கு அவரது குடும்பத்தினர் பரிசாக புகைப்படம் ஒன்றை வழங்கினர்.

அதில், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் முக ஸ்டாலினை வாழ்த்துவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. குறிப்பாக, கருணாநிதி தனது மஞ்சள் துண்டை ஸ்டாலினுக்கு போர்த்தி விட்டது போன்ற ஓவியம் வரையப்பட்டிருந்தது. இதனை கண்டு ஸ்டாலின் பெரும் மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான தகவலை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏவும், ஸ்டாலினின் மகனுமான உதயநிதி தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக – தமிழக முதல்வராக நம்மை வழிநடத்தவுள்ள கழக தலைவர் M. K. Stalin அவர்களுக்கு தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் இணைந்து, தலைவர் அவர்களை வாழ்த்துவது போன்ற ஓவியத்தை பரிசளித்தோம். இதனை வரைந்த ஓவியர் திரு.பிரேம் டாவின்சிக்கு அன்பும், நன்றியும்,” எனக் குறிப்பிட்டு, அந்தப் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

ஸ்டாலினின் குடும்பத்தினர் கொடுத்த அந்தப் புகைப்படத்தை திமுகவினர் சமூகவலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Views: - 334

0

0