சசிகலா குறித்து பேசிய கருத்தில் பின்வாங்கப் போவதில்லை : உதயநிதி பிடிவாதம்..!! எதிர்க்கும் பெண்கள்..!!!

13 January 2021, 5:26 pm
udhayanidhi -- sasikala - updatenews360
Quick Share

சென்னை : சசிகலா தொடர்பாக பேசிய கருத்தில் பின்வாங்கப் போவதில்லை என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி நடைபெற்ற திமுக பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை ஆபாசமாக பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இதனிடையே, அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உதயநிதி ஸ்டாலின் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில், சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் திமுக செயல்வீரர்கள் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- சசிகலா குறித்து தான் தவறாக எதுவும் பேசவில்லை என்றும், தாம் கூறிய கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அவரது இந்தக் கருத்திற்கு பெண்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Views: - 3

0

0