பேரனாக, மகனாக, அமைச்சராக வந்தாலும்… என்றுமே உங்கள் வீட்டு பொறுப்பான செல்லப்பிள்ளை ; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

Author: Babu Lakshmanan
29 December 2022, 4:14 pm
Quick Share

திருச்சி ; என்றுமே உங்கள் வீட்டு பொறுப்பான செல்லப்பிள்ளையாக இருப்பேன் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். விழாவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் வரவேற்றார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.655 கோடி மதிப்பீட்டிலான ஸ்ரீரங்கம் ஸ்டெம் பூங்கா, கீழபுலிவார்டு ரோடு லாரி டெர்மினல் உள்ளிட்ட 5,639 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். மேலும், 20,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது :- 1989ம் ஆண்டு தர்மபுரியில் முன்னாள் முதல்வர் கருணாந்தி சுயஉதவி குழுவை துவக்கி வைத்தார். தொடர்ந்து அதனை 1996ம் இயக்கம் மாற்றி தமிழகத்தில் மாவட்ட முழுவதும் விரிவாக்கம் செய்தார். இத்திட்டத்தை 4 லட்சம் கிராம பகுதிகளுக்கும் கொண்டு சென்றார்.

2020- 21ல், 16,000 புதிய குழு உருவாக்கிதிராவிட மாடல் ஆட்சியில் சுயஉதவி குழு முதன்மை பெற்று வருகிறது. இதன் பெருமை தாய்மார்களை சேரும் பிற மாநிலத்திலும் இத்திட்டம் சென்றடைந்துள்ளது. 2021ல் 16 லட்சம் சுயஉதவிக்குழுவுக்கு 2800 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சுயசார்பு பெற்று பெண்கள் செயல்பட வேண்டும் என்ற நோக்கி சுயஉதவிக்குழு செயல்படுகிறது.

முதல்வராக பதவியேற்றவுடன் நகர பேருந்து பெண்கள் இலவசமாக பயணம் என அறிவிப்பு. இது வரை இந்த அறிவிப்பினை தொடர்ந்து இதுவரை 100 கோடி பெண்கள் பயன்படுத்தி உள்ளனர். தொடர்ந்து, புதுமை பெண் திட்டம், புதிய புரட்சி திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

2021-22, 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 4 லட்சம் பேர் பயனாளிகளாக உள்ளனர். தற்போது சுயஉதவிக்குழுவிற்கு 25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து 2023 மார்ச் மாதத்திற்குள் நிறைவேற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து சுய உதவிக் குழுவினர் பல்வேறு பயன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நடைபெறும் இந்த நிகழ்வில், 42,081 சுயஉதவிக் குழுவை சேர்ந்த பெண்களுக்கு 2,548 கோடி நிதியுதவி, 33 சமுதாயம் சார்ந்த பெண்களுக்கு மணிமேகலை விருது, சிறந்த முறையில் செயலாற்றும் வங்கியில் 8 வங்கியாளர்களுக்கு வங்கியாளர் விருது வழங்கப்படுகிறது.

சுயஉதவிக குழுவின் திட்டத்தில் பயன பொறாதவர்கள் இல்லை எனலாம். திருச்சிக்கு
முதல்வரின் மகனாக, கலைஞரின் பேரனாக, அமைச்சராக வந்தாலும், என்றும் உங்கள் வீட்டு செல்லபிள்ளையாக இருப்பதையே விரும்புகிறேன், என் பேசினார்.

Views: - 406

0

0