உங்கள் தொகுதி… எங்கள் பார்வை : மாதவரம்!!

7 March 2021, 8:00 am
madhavaram - updatenews360
Quick Share

திமுக வின் எஸ். சுதர்சனம் நடப்பு சட்டமன்ற உறுப்பினர் ஆக உள்ளார்.

467 வாக்குசாவடிகள் உள்ள இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் 4 இலட்சத்து 33 ஆயிரம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றனர்.
இதில் 2000 பெண் வாக்காளர் அதிகம். தொகுதி மறு சீரமைப்பில் 2017 ல் உருவான இந்த தொகுதியில் அஇஅதிமுக, திமுக தலா ஒரு முறை வென்றிருக்கின்றன. திருவொற்றியூரின் பெரும்பாலான பகுதிகள், பொன்னேரியின் சில பகுதிகள் தொகுதி க்குள் அடங்கி அதிக பகுதிகள் சென்னை மாநகராட்சி பகுதிக்குள் வருகின்றன.

மாதவரம் தொகுதியில் நாரவாரி குப்பம் (செங்குன்றம் ) புழல் ஏரி, சோழவரம் ஏரி, தமிழ்நாடு அறிவியல் பல்கலைக்கழகம், புழல் மத்திய சிறைச்சாலை, மாதவரம் பால்பண்ணை ஆகியவை முக்கியமானவை.

செங்குன்றத்தில் 100 அரிசி ஆலைகளும் சோழவரத்தில் அதே எண்ணிக்கையிலான தான்ய கிடங்குகளும் உள்ளன.
ரெட்டியார், யாதவர், தலித்கள் கணிசமாக உள்ளனர்.

சோழவரத்தில் குடிநீர் திருட்டும் செங்குன்றம் ஜிஎன்டி சாலை போக்குவரத்து நெரிசலும் அரசியல்வாதிகள் கவனிக்க வேண்டியவை.

பல்வேறு வகையான பிரச்சினைகள் உள்ள இந்த தொகுதியில் கடைசி நேரத்தில் களத்தில் ஆதிக்கம் செலுத்தும் பிரச்சினையே தேர்தல் முடிவை தீர்மானிக்கும்.

Views: - 7

0

0