உங்கள் தொகுதி… எங்கள் பார்வை : மதுரவாயல்!!
4 March 2021, 9:41 pmமதுரவாயல் என்ற தொகுதியின் பெயரே அழகு தமிழின் அடையாளம். இங்குள்ள வாக்குச்சாவடிகள் 421ல் ஆண், பெண் வாக்காளர்கள் சமமான அளவில் ஏறத்தாழ 4 இலட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தொகுதியின் நடப்பு சட்டமன்ற உறுப்பினராக அஇஅதிமுக வின் பெஞ்சமின் உள்ளார்.
2011ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த கே.பீமாராவ் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. சட்டசபையில் அதிக கேள்விகள் எழுப்புவதில் அவர் புகழ்பெற்று விளங்கினார்.
இந்த தொகுதியில் அம்பத்தூர் நகராட்சி 35,36,52வது வார்டுகள்,நெற்குன்றம், மதுரவாயல், ராமாபுரம் பேரூராட்சி பகுதிகள் அடக்கம். வன்னியர்கள், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியில் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பிற சமூகத்தை சேர்ந்தவர்களும் கணிசமான அளவு வசிக்கின்றனர். கட்டுமான துறையில் பணியாற்றும் முறைசாரா தொழிலாளர்களும் இந்த தொகுதியில் வசிக்கின்றனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரி, வளசரவாக்கத்தில் உள்ள சிவன் கோவில் ஆகியவை முக்கியமானவை. அம்பத்தூரில் இருந்த மதுரவாயல் தாசில்தார் அலுவலகம் ஆலப்பாக்கம் சாலைக்கு மாற்றப்பட்டது.
மதுரவாயல் சென்னை துறைமுகம் உயர்பாதை சாலை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படாமல் இருப்பது பெரும் பலவீனம். 2000க்கும் மேற்பட்ட சாலைகள் போடப்பட்டது பீமாராவின் சாதனை என்றால், அதற்கு நிகரான பணிகளை செய்து மக்களின் பாராட்டுதல்களை பெற்று இருக்கிறார் பெஞ்சமின். பாமக வின் நேசப்பார்வை விழுபவர் வெற்றி கனியை பறிப்பது இங்கு சுலபம்.
0
0