தமிழகத்தில் தாமரையை மலர வைக்கும் முயற்சியில் பாஜக: அடிக்கடி விசிட் அடிக்கும் ‘அமித்ஷா’…!!

2 March 2021, 5:15 pm
amit-shah-759
Quick Share

சென்னை: சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜக தலைவர்கள் தமிழகத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் பா.ஜ.க.வினர் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று சட்டசபையை அலங்கரிக்க வேண்டும் என்று அக்கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.

எனவே, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி மத்திய அமைச்சர்கள் அவ்வப்போது தமிழகத்துக்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் விழுப்புரத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

இந்நிலையில், மீண்டும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 7ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 7ஆம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா நாகர்கோவிலில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 15

0

0