ம.பி.யில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு : போட்டியின்றி எம்.பி ஆனார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2021, 4:49 pm
L Murugan MP - Updatenews360
Quick Share

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தேர்வாகியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக எல்.முருகன் போட்டியிடுகிறார் என்று பாஜக தலைமை அறிவித்ததை அடுத்து, மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் முன்னிலையில் கடந்த 21ம் தேதி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை இடத்திற்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்திய இணையமைச்சர் எல் முருகன் போட்டியின்றி எம்பியாக தேர்வாகியுள்ளார்.

வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் எல் முருகன் போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வான சான்றிதழ் வழங்கப்பட்டது.

Views: - 109

0

0