அண்ணன் பிரபாகரன் மாதிரி நான் கிடையாது… சுத்தக் காட்டுப் பையன்.. எல்லாம் ஓரளவுக்குதான் : எச்சரிக்கும் சீமான்..!!!

Author: Babu Lakshmanan
16 February 2022, 2:03 pm

வேலூர் : புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது பொய் வழக்குப் போட்டதாக, திமுகவினருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில் வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 40 வார்டுகளில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. இது தவிர நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் போட்டியிடுகிறது. தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பரப்புரை வேலூர் அடுத்த இடையஞ்சாத்து பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :- LIC தனியார் மயமாக்கப்படும் என அறிவித்ததில் இருந்து நாங்கள் போராடி வருகிறோம். அதை முதல்வர் இன்று தான் பேசியுள்ளார். LIC தனியார் மயக்காலை மத்திய அரசு கைவிட வேண்டும் என முதல்வர் கூறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மத்திய அரசு லாபத்தில் இயங்கும் அனைத்து பொது நிறுவனங்களையும் விற்க்கிறோம் என்கிறார்கள். இழப்பில் போகும் தனியார் நிறுவனங்களை அரசே ஏற்க்கும் என்கிறார்கள் இது எந்த மாதிரியான ஆட்சி முறை என்றே தெரியவில்லை. LIC தனியார் மயமாக்குவதை அனுமதிக்க கூடாது.

இதில் எங்களை போலவே போராட்டம், ஆர்பாட்டம் செய்யாமல் 39 எம்.பிக்களை வைத்துள்ளவர்கள் பாராளுமன்றத்தில் தர்க்கம் செய்து தீவிரமாக எதிர்க்க வேண்டும். 

அதிமுக, திமுக என இரண்டு கட்சியுமே உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்துவதில்லை. தற்போது ஆட்சி அதிகார திமிரு, கொடுங்கோண்மையினால் மற்ற வேட்பாளர்களை அச்சுறுத்தி திரும்ப பெற செய்கிறார்கள். இப்போதே ஆள்கடத்தல் அச்சுறுதல் உள்ளது ஆட்சிக்கு வந்துவிட்டால் என்ன ஆகும். அதே சமயம் நகர்புற தேர்தலில் மறைமுக தேர்தல் அவசியமற்றது நேரடியாக மேயரை தேர்தெடுக்க வேண்டும். மறைமுக தேர்தல் பேரத்துக்கே வழிவகுக்கும். இது ஜனநாயகம் அல்ல பண நாயகம் தான். மேலும். நம் நாட்டின் குடியரசு தலைவரையே மக்கள் ஓட்டு போட்டு தான் தேர்வு செய்ய வேண்டும் இது தான் குடியரசாக இருக்கும்.

தேர்தல் நேரம் என்பதால் தான் அதிமுக- திமுக ஆகியவை நீட் விவகாரம் குறித்து பேசுவார்கள். தேர்தல் நேரத்தில் பா.ஜ.க கார் எரியும், அலுவலகத்தில் குண்டு போடுவார்கள், தேர்தல் நேரத்தில் காவி துணி அணிந்து கல்லூரிக்கு செல்வார்கள். மேலும் ஆளுநரை திரும்ப பெறு என மாநில அரசு கூறுகிறது. அப்படியானால் ஆளுநர் மத்திய அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறார் என அர்த்தம். அப்படி இருக்க மத்திய அரசு எப்படி ஆளுநரை மாற்றும், என்றும் கூறினார். 

பின்னர் அவர் பேசுகையில், என்கிட்ட ஆட்சி சிக்கிச்சு. பஞ்சமி நிலம் மொத்தமாக மீட்கப்படும். புதுக்கோட்டையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை கஞ்சா விற்றதாகச் சொல்லி இரவோடு இரவாகத் தூக்கி உள்ளே வெச்சுட்டாங்க. அவன் படிக்கிற பையன். தேர்தல்ல இருந்து விலக மாட்டேன்னு சொன்னதுக்காக பழிவாங்கியிருக்காங்க. எங்கமேல அவ்வளவு பயமா?. ஒரு காலம் வரும். நான் வருவேன். உன் வீட்டு மாடியில், அடுப்படியில், படுக்கையில்கூட கஞ்சா விளையும். காலையில் நீ எழுந்திருக்கும்போது தலையிலகூட கஞ்சா விளையும். கார் டிக்கியில் விளையும். எல்லாவற்றிலும் விளையும்.

என்னை மாதிரி வஞ்சம் வைத்து பழித்தீர்க்கும் மனித மிருகத்தை நீ வரலாற்றிலேயே சந்திச்சிருக்க மாட்டாய். நான், அவ்ளோ நல்லவன் இல்லை. ஓரளவு நல்லவனாக இருப்பதுதான் என்னுடைய பலம். மக்கள் அரசியல் செய்கிறேன். நான் அண்ணன் பிரபாகரன் மாதிரியில்லை. என்னுடைய களம் வேறு; காலம் வேறு. நான் சுத்த காட்டுப் பையன். என் ஊரும் பொட்டல் காடுதான் என பேசினார். 

  • Bigg Boss பிக் பாஸ் பிரபலத்துக்கு வந்த ஆபாச வீடியோக்கள்… மர்மநபரின் போட்டோவை வெளியிட்டு புகார்!
  • Views: - 2049

    0

    0