காலியாகும் தேர்தல் களம் : வேட்பாளர்கள் திடீர் மாயமாகும் ரகசியம்!!

14 January 2021, 7:32 am
Political Parties - Updatenews360
Quick Share

ஒவ்வொரு சட்டப்பேரவை தேர்தலின்போதும் சிறு அரசியல் கட்சிகளுக்கு பெரும் தலைவலியாக அமைவது அவற்றின் வேட்பாளர்கள்தான். எந்த மாநிலத்தில் நடக்கும் தேர்தல் என்றாலும் சரி, இப்பிரச்சினையை எல்லா பிரதான கட்சிகளுமே சந்திக்க வேண்டிய நெருக்கடி சூழல் நிலவுகிறது.

2014 Indian general election in Tamil Nadu - Wikipedia

குறிப்பாக மூன்றாவது, நான்காவது அணிகளுக்கு தலைமை தாங்குவோருக்கு இதில் அதிக சிக்கல். தேர்தல் பிரச்சாரம் தொடங்கி வாக்குப்பதிவு நடந்து முடிந்து ஓட்டுகளை எண்ணி முடிக்கும் வரை இவர்களால் நிம்மதியாக உறங்கவே முடியாது.

வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டதுபோல் இவர்களின் வேட்பாளர்களை கண்காணிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். இதற்காக கட்சியில் நிச்சயம் உளவு பார்க்கும் ஒரு பிரிவே தேவைப்படும். ஒரு தொகுதியில் குறிப்பிட்ட கட்சி வெற்றி பெற்றுவிடும் என்ற உறுதி நிலை தென்பட்டால் அதே தொகுதியில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வதில் கொஞ்சமும் ஆர்வம் காட்டமாட்டார்கள். பணத்தை செலவு செய்வதற்கு தயக்கம் காட்டுவார்கள்.

அதுவும் தோற்பது நிச்சயம் என்று தெரிந்துவிட்டால் தொகுதி பக்கமே தலை வைத்துக் கூட படுக்க மாட்டார்கள். 3-வது, 4-வது அணிகளை தவிர இன்னும் ஒரு சிலர் ஏதாவது ஒரு கட்சியின் பெயரை பதிவு செய்து அதன் சார்பில் களம் காண்பார்கள். ஆனால் அவர்கள் போட்டியிடும் நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அல்ல.

Lok Sabha Election 2019: Voting percentage in Tamil Nadu 52.02% till 3 pm

வேட்பு மனுத் தாக்கல் செய்துவிட்டு அப்படியே ஒதுங்கி விடுவார்கள். அவர்களின் ‘பிளான்’ சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பதாக இருக்கும்.

இன்னொரு புறம், இரண்டு ஜாம்பவான் அணிகளின் வேட்பாளர்கள் பலமாக மோதும் போது நமக்கு ஏன் வம்பு? என்று சிறிய கட்சிகளின் வேட்பாளர்கள் பதுங்கிக் கொள்வதும் வழக்கம்.
இவர்கள் தேர்தல் களத்திற்கே வர மாட்டார்கள். இப்படி தேர்தல் காலத்தில் வேட்பாளர்கள் திடீரென மாயமாவது இன்று,நேற்றல்ல காலம் காலமாக நடந்து வருகிறது.

AIADMK rakes up Law and Order issues under DMK ahead of elections -  DTNext.in

தமிழகத்தைப் பொறுத்தவரை 1996 சட்டப் பேரவை தேர்தலில்தான் இதுபோன்ற கேலிக் கூத்துகளை அதிகம் காண முடிந்தது.
அந்த தேர்தலில் மூன்றாவது அணியாக களம் கண்ட மதிமுகவின் சுமார் 20க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தல் களத்திற்கே வராமல் நைசாக நழுவி கொண்டார்கள் என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

MDMK chief Vaiko awarded 1-year jail in sedition case | Deccan Herald

இறுதிக் கட்ட பிரசாரத்தின்போது பல தொகுதிகளில் மதிமுக வேட்பாளர்களை காண முடியவில்லை என்று அக்கட்சியினரே புலம்பித் தள்ளியதும் உண்டு. இந்தத் தேர்தலில் மதிமுகவுக்கு சுமார் 8 சதவீத வாக்குகள் கிடைத்தாலும் கூட அக்கட்சியால் ஓர் இடத்தைக் கூட கைப்பற்ற முடியாமல் போய்விட்டது. அதன் தோழமை கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்டும் ஓரிடத்தில் வென்றது.

வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் போகப் போக சூழ்நிலை அறிந்து தங்களாகவே ஒதுங்கிக் கொண்டனர் என்றும் இதற்கு காரணம் கூறப்பட்டது.

அப்போது திமுக-தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணிக்காக நடிகர் ரஜினி ஆதரவு குரல் கொடுத்தது மதிமுக கூட்டணியை பதம் பார்த்தது என்பதும் உண்மை. இதனால் கருணாநிதிக்கு, மாற்று அரசியல் சக்தியாக வைகோ வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருடைய கட்சி பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத, வைகோவால் அதன்பிறகு அங்குமிங்கும் அணி மாறத்தான் முடிந்தது.

G K Vasan's mother passes away - News Today | First with the news

1996 தேர்தலின்போது மதிமுக வேட்பாளர்கள் மட்டுமல்ல. சிறு சிறு கட்சிகள், செல்வாக்கு மிகுந்த பல சுயேச்சை வேட்பாளர்கள் கூட மாயமாகிப் போனார்கள். இவர்களை, சொந்த ஊர்களில் கூட பார்க்க முடியாத பரிதாப நிலையும் வாக்காளர்களுக்கு ஏற்பட்டது. ஏதோ காரணங்களுக்காக இவர்கள் திடீரென வெளிநாடு பயணம் போய் விட்டதுபோலவும் தொகுதி வாக்காளர்களுக்கு தோன்றியது.

Maanila Cong-AIADMK talks hit roadblock over symbol | Deccan Herald

தீவிர பிரச்சாரம் மேற்கொண்டால் ஓரளவு கடும் போட்டியை ஏற்படுத்த முடியும் என்கிற நம்பிக்கை இவர்களுக்கு ஏற்படாததே முதல் காரணம். மேலும் தேவையின்றி எதற்காக பணத்தை விரயம் செய்ய வேண்டும் என்ற எண்ணமாக கூட இருக்கலாம். ஆனால் பல நேரங்களில் பெரிய கட்சிகள் பண பலத்தால் சிறுகட்சி வேட்பாளர்களை விழுங்கி ஏப்பம் விட்டு விடுகின்றன என்பதும் கண்கூடு.

2016 சட்டப்பேரவைத் தேர்தலை எடுத்துக்கொண்டால் மக்கள் நலக் கூட்டணிதான் இப்படி பெரும் பாதிப்பை சந்தித்தது. பல தொகுதிகளில் இக் கட்சியின் வேட்பாளர்களை காண்பதே அரிதாக இருந்தது.

குறிப்பாக 20க்கும் மேற்பட்ட தேமுதிக, மதிமுக வேட்பாளர்கள் தங்களது தொகுதி பக்கம் செல்லாமல் மாயமாகி விட்டனர் என்றும் அப்போது தகவல்கள் வெளியாகின.

Vijayakant aligns with PWF for TN Assembly polls - The Hindu BusinessLine

இதேபோல் ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் விசிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பலர் தங்கள் தொகுதி பக்கமே எட்டிப் பார்க்கவில்லை என்கிறார்கள்.

இதற்கு வைட்டமின் ‘சி’மட்டுமே காரணம் என்று கூறிவிட முடியாது. வெற்றி வாய்ப்பு இல்லை என்பதை நிதர்சனமாக உணர்ந்ததால்தான் இந்த கட்சிகள் புத்திசாலித்தனமாக ஒதுங்கிக் கொண்டன என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

makkal nala Kootani | Patrikai - Tamil Daily - latest online local breaking  news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket,  video & cartoon

இந்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படுதோல்வியை சந்தித்தது. சுமார் 15 சதவீதம் வரை ஓட்டுகள் கிடைக்கும் 20 முதல்
30 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணிக்கு வெறும் 6 சதவீத வாக்குகளே கிடைத்தது. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் அதிமுக-திமுக என்னும் இருபெரும் பயில்வான்கள் மோதிக்கொண்ட நிலையில் இவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்பதே. இப்படி வேட்பாளர்கள் மாயமானதில் தமிழகத்தில் இருமுறை பலத்த அடி வாங்கிய கட்சி மதிமுக மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu: AIADMK and DMK hope alliance arithmetic will boost their  chances in Lok Sabha polls

இந்த இரண்டு தேர்தல்களை மட்டும் குறிப்பிட்டு சொல்வதற்கு நிறைய காரணங்கள் உண்டு. 1996க்கு முந்தைய தேர்தல்களிலும் இதுபோல் தேர்தல் சமயத்தில் பிரச்சாரத்திற்கு வராமல் மாயமாகிவிட்ட கட்சி வேட்பாளர்கள் உண்டு. எனினும் அந்த எண்ணிக்கை வெகு குறைவுதான்.

தமிழகத்தில் மே மாதம் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் சிறு சிறு கட்சிகளின் வேட்பாளர்கள் மாயம் ஆவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

MDMK exits People's Welfare Front - The Hindu BusinessLine

எனவே உறுதியாக கடைசி வரை போராடும் குணம் கொண்ட வேட்பாளர்களை மட்டுமே மூன்றாவது, நான்காவது அணிகள் களம் இறக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் முழுவீச்சில் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டுவார்கள். இல்லையென்றால் கடைசி நேரத்தில் என்று திடீரென மாயமாகி விடலாம்.

பிறகு டெபாசிட் தொகை கூட கிடைக்காது. இதனால் அவர்கள் சார்ந்த கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படும் என்பதும் உண்மை.

Views: - 7

0

0