அரசு நிலத்தை காலி பண்ணுங்க… இல்லைனா : திமுக எம்பிக்கு உயர்நீதிமன்றம் பகிரங்க எச்சரிக்கை!!!
முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகனும், திமுக எம்பியுமான கலாநிதி வீராசாமி, கோயம்பேட்டில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த இடம் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலம் என்று குற்றச்சாட்டு உள்ளது.
இது தொடர்பான வழக்கில் தான், கலாநிதி வீராசாமிக்கு இடத்தை காலி செய்ய அக்டோபர் 10-ம் தேதி வரை உயர் நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமிக்கு சொந்தமான வீகேர் மருத்துவமனை அமைந்துள்ள நிலத்தில் 62.93 சதுர மீட்டர் பரப்பு நிலத்தை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும் கிராம நத்தம் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி, அதனை காலி செய்யும்படி 2011ம் ஆண்டு கலாநிதி வீராசாமிக்கு தமிழக அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதை எதிர்த்தும், நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் டாக்டர் கலாநிதி வீராசாமி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1995 ஆம் ஆண்டு கலாநிதி வீராசாமியின் குடும்பத்தினர் வாங்கியதாகவும் அந்த நிலம் வருவாய்ப் பதிவேட்டில் கிராம நத்தம் (பொது கிராம நிலம்) என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதன் மீது அரசு உரிமை கோர முடியாது என்றும் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ‘கிராம நத்தம் நிலம் என்பது வீடில்லா ஏழை மக்களுக்கு வழங்கவே ஒதுக்கப்பட்டது. எனவே அந்த நிலத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாது. மனுதாரர் எம்.பி.யாக உள்ளதாலும், அவரது தந்தை தமிழக முன்னாள் அமைச்சராக இருந்துள்ளார் என்பதாலும், அவர் நிலமற்ற ஏழை அல்ல..
தமிழகத்தில் சமூக நீதி பாதுகாவலர்கள் எனக் கூறும் அரசியல் கட்சிகள், மக்கள் விருப்பத்துக்கு கவுரவம் வழங்க வேண்டும். எனவே கலாநிதி வீராசாமி எம்பி ஒரு மாதத்தில் நிலத்தை காலி செய்து ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரை அப்புறப்படுத்தி, நிலத்தை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நீதிபதி கூறினார். அத்துடன் அந்த வழக்கை முடித்து வைத்தும் உத்தரவிட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.