தடுப்பூசி விவகாரம்.. பழி போட்டு தப்பிக்க வேண்டாம்! தமிழக அரசுக்கு அதிமுக ‘பொளேர்’!!

18 July 2021, 7:01 pm
Vaccine Admk Dmk- Updatenews360
Quick Share

அண்மையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் டெல்லி சென்றிருந்தார். அங்கு அவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இருவரையும் சந்தித்து பேசினார்.

Tamil Nadu minister visits Delhi, seeks special allocation of 1 cr COVID-19  vaccines, exemption from NEET 2021

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தமிழகத்தில் தடுப்பூசி போடுவதற்கு தயார் நிலையில் 6 கோடி பேர் இருப்பதாகவும் எனவே ஒவ்வொரு மாதமும் ஒதுக்கீடு செய்யும் தடுப்பூசிகளை கூடுதலாக வழங்கவேண்டும் என்று கேட்டுகொண்டார்.

அதேபோல் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சரிடம்,
தான் வலியுறுத்தியதாகவும் அதற்கு அவர் உங்களது கோரிக்கைகள் குறித்து
பரிசீலனை செய்வதாகவும் கூறியதாக சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

Union Minister Dharmendra Pradhan urges Centre for 19 more oxygen plants in  Odisha- The New Indian Express

அவர் இப்படி சொன்ன அடுத்த சில மணி நேரங்களில் தர்மேந்திர பிரதான் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், “தமிழக மாணவர்களின் நலனுக்காக விருதுநகர், திண்டுக்கல், செங்கல்பட்டு மற்றும் திருப்பூரில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் எனவும், இதன் மூலம் தமிழகத்தில் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்து உள்ளது எனவும் மா.சுப்பிரமணியத்திடம் விளக்கினேன்” என்று அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அதாவது திமுக அரசு கேட்டது, நீட் தேர்வில் இருந்து தமிழத்திற்கு விலக்கு. மத்திய கல்வி அமைச்சரோ, நீட் தேர்வை எழுதுவதற்கு வசதியாக தமிழகத்திற்கு கூடுதலாக 4 தேர்வு மையங்களை அறிவிக்கிறார்.

அதுவும் தமிழக அமைச்சரிடம் இதுகுறித்து விளக்கினேன் என்றும் அவர் சொல்கிறார். அப்படியென்றால் நீட் தேர்வு மையங்களை அதிகரிக்கவேண்டும் என்கிற ஒரு கோரிக்கையையும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மத்திய அரசிடம் வைத்திருக்கலாம் என்றே கருதத் தோன்றுகிறது. அதாவது இவர்கள் சொல்வது ஒன்றாக இருக்கிறது. நடப்பது வேறாக உள்ளது.

Trouble for EPS? DMK alleges highways contracts given to CM's family, goes  to DVAC | The News Minute

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா நோய்த் தடுப்பூசியினை கண்டுபிடித்து, இந்தியாவில் அந்தத் தடுப்பூசியினை முதலில் முன்களப் பணியாளர்களுக்கும், பிறகு 60 வயது முதியோர்களுக்கும் என்று, படிப்படியாக கடைசியாக 40 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று எங்கள் அரசின் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு அறிவித்தது.

அப்போது ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் பின்விளைவுகள் ஏற்படும் என்று தமிழ்நாட்டு மக்களிடையே அச்சத்தினை ஏற்படுத்தினர். எனவே, அதைப் போக்க நானும், அமைச்சர்களும், அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு, தமிழக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். எனினும் அன்றைய எதிர்க்கட்சியினர் மக்களிடையே எழுப்பிய பய உணர்வினால் எதிர்பார்த்த அளவு தமிழக
மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவில்லை.

MK Stalin and Thol Thirumavalavan receive COVID-19 vaccine in Chennai | The  News Minute

திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே உலகளாவிய டெண்டர் விடப்பட்டு, கொரோனா தடுப்பு மருந்து கொள்முதல் செய்யப்பட்டு தமிழக மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்றது. பிறகு செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பு நோய் மருந்து தயாரிப்பு மையத்தை மாநில அரசே ஏற்று நடத்தும் என்றும், அங்கு கொரோனா தடுப்பு மருந்து அதிகளவில் தயாரிக்கப்படும் என்றும் வாக்குறுதி ஒன்றை அளித்தது.

அந்த முயற்சி பலனளிக்காத நிலையில், தமிழ் நாடு அரசே வெளிச் சந்தையில் தடுப்பு மருந்துகளை வாங்கி பொதுமக்களுக்கு அளிக்கும் என்று புதிய கதை ஒன்றை சொல்லியது. இப்படி தினமும் ஒரு அறிக்கை, பேட்டி என்று மக்களிடையே பொய்யான வாக்குறுதிகள் அளித்ததைத் தவிர வேறென்ன செய்தது இந்த அரசு?

Chart: COVID Vaccines Compared

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தடுப்பு மருந்து எவ்வளவு பேருக்கு தேவைப்படும்? அதில் எத்தனை பேர் இணை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? யாருக்கு முதலில் அளிக்க வேண்டும்? என்ற திட்டமிடல் இல்லை. மக்களிடையே, தடுப்பூசி இருப்பு குறித்த உண்மையைக் கூறாமல், மத்திய அரசின் மேல் சுலபமாக பழி சுமத்தி கடமையில் இருந்து திமுக அரசு தப்பித்து வருகிறது.

முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட பொதுமக்களில் பலர், இரண்டு மாதங்கள் கடந்த பின்னும், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக பரிதவிக்கிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சியைத் தவிர்த்து, கொரோனா தடுப்பு மருந்து விஷயத்தில், மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்துவதைக் கைவிட்டு, மக்களைக் காப்பாற்றும் பணியில் மாநில அரசு ஈடுபட வேண்டும்.

மத்திய அரசால் தமிழ் நாட்டிற்கு கடந்த இரண்டு மாதத்தில் எத்தனை லட்சம் தடுப்பூசிகள் தரப்பட்டது? அவை எத்தனை பேருக்கு போடப்பட்டது?. இன்னும் எத்தனை பேருக்கு இரண்டாம் டோஸ் போடப்பட வேண்டும்? மாவட்டங்கள் தோறும் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுகிறது? தடுப்பூசி முகாமில் யார் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது? ஆகியவை குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று கூறிஇருந்தார்.

திடீரென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கப்போகும் திமுக தலைவர் மு க  ஸ்டாலின்.!! காரணம் இதுவா.? - Seithipunal

இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், “அதிமுக ஆட்சியில் நாளொன்றுக்கு 61,000 தடுப்பூசிகளே போடப்பட்டன. ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒரு நாளைக்கு 1.61 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன.

மத்திய அரசிடமிருந்து இதுவரை ஒரு கோடியே 80 லட்சத்து 32,170 தடுப்பூசிகள் வந்துள்ளன. ஒரு கோடியே 76 லட்சத்து 19,174 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அதிமுக ஆட்சியில் 103 நாட்களில் வெறும் 63 லட்சத்து 28,207 தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளன.

அவர்களின் ஆட்சியில் 4,34,838 தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டு உ ள்ளன. இது மொத்தமாக ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளில் 6 சதவிகிதம் ஆகும். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு குப்பியில் இருந்து 11 அல்லது 12 பேருக்கு தடுப்பூசி மருந்து செலுத்தியதன் மூலம் கூடுதலாக 7 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன” என்று கூறி உள்ளார்.

இது தொடர்பாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கூறும்போது, “அதிமுக ஆட்சி காலத்தில் குறைந்த அளவிலேயே தடுப்பூசிகள் போடப்பட்டதாக அமைச்சர் சுப்பிரமணியம் சொல்கிறார். இதற்கு யார் காரணம்?… பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்ட எல்லோருக்குமே உயிர் பயம் அதிகமிருக்கும். அதனால்தான் திமுகவினர் தேர்தல் நேரத்தில் கிளப்பிய பீதிகளுக்கு பயந்துபோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள அவர்கள் பெரிதும் தயக்கம் காட்டினர். எனவே அப்போது தடுப்பூசிகள் வீணானதற்கு திமுக கிளப்பிய பீதியும், பயமுறுத்தலும்தான் முக்கிய காரணம்.

இதுபோன்ற பீதிகளை ஏன் கிளப்பினீர்கள் என்ற கேள்விக்கு இதுவரை திமுகவிடம் இருந்து உரிய பதில் இல்லை. ஏனென்றால் தேர்தல் நேரத்தில் திமுக தலைவர்கள் அப்படி பேசியதற்கு வீடியோ ஆதாரங்கள் இருக்கிறது. அதனால் அவர்களால் அதை மறுக்கவே முடியாது. இதையெல்லாம் மறந்துவிட்டு, தங்களுக்கு வசதியாக அதிமுக ஆட்சியின்போது தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டதாக அமைச்சர் பேசுகிறார்.

Random checks at private hospitals on COVID-19 tariff, says Ma. Subramanian  - The Hindu

மத்திய அரசிடம் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகள் கேட்கும் திமுக அரசு, தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்த தடுப்பூசிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் சீராக விநியோகிக்கவில்லை. சென்னைக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. தற்போது வரை தமிழகத்தில் 1 கோடியே 94 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் சென்னை நகரில் மட்டுமே, சுமார் 34 லட்சத்து 75 ஆயிரம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அதாவது இதுவரை தமிழகம் முழுவதும் போடப்பட்டுள்ள மொத்த தடுப்பூசிகளில் 6-ல் ஒரு பங்கு சென்னையில் போடப்பட்டு இருக்கிறது.

அதுவும் முதலமைச்சரின் மகன் உதயநிதி வெற்றி பெற்ற சேப்பாக்கத்தில் தமிழகத்திலேயே எந்தவொரு தொகுதியிலும் இல்லாத அளவிற்கு 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது.

Tamil Nadu election: Decoding DMK's youth scion Udhayanidhi Stalin - India  News

ஆனால் கொரோனா இரண்டாம் அலையில் சென்னைக்கு இணையாக பாதிக்கப்பட்ட கோவை,சேலம் ஈரோடு, திருப்பூர், மதுரை,திருச்சி மாவட்டங்களுக்கு தடுப்பூசிகள் மிகக் குறைந்தளவிலேயே வினியோகம் செய்யப்பட்டது.

தற்போது மத்திய அரசிடம் மக்கள் தொகைக்கு ஏற்ப மாநிலங்களுக்கு தடுப்பூசி ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்த பின்பே அதேபோல் தமிழகத்தில் அத்தனை மாவட்டத்தினரும் கேட்க ஆரம்பித்தால் என்னவாகும்? என்று பயந்துதான் திமுக அரசு தற்போது ஓரளவு சீராக வினியோகம் செய்து வருகிறது.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையை மறைப்பது போலவே, தடுப்பூசி விஷயத்திலும் தமிழக அரசு தடுமாறுகிறது. தவறான தகவல்களை தருகிறது” என்று அவர்கள் குறிப்பிட்டனர்

Views: - 167

0

0