இதுக்காகத்தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியா..!!! தேர்தலுக்கு பிறகு காணாமல் போகும் மதிமுக..?

8 March 2021, 8:52 pm
Quick Share

27 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இருந்த வைகோ, வாரிசு அரசியலை எதிர்த்து தனியாக மதிமுக என்னும் கட்சியை தொடங்கினார். எந்த நோக்கத்திற்காக கட்சியை தொடங்கினாரோ, அதை சரியாக செய்தார். தனது கட்சியிலும் மகன் உள்பட யாரையும் உள்ளே கொண்டு வரவில்லை. மேலும், தேர்தல் பிரச்சாரங்களின் போதோ அல்லது பொதுக் கூட்டங்களிலோ, திமுகவை ஒழிக்காமல் ஓயமாட்டேன் என ஆவேசமாக பிரச்சாரம் செய்தார். அதேபோல, தன்னை பொடா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த ஜெயலலிதாவிடமும் நட்பு பாராட்டினார்.

ஆனால், காலத்தின் கட்டாயம் எந்த திமுகவை ஒழிப்பேன் என கூறி வந்தாரோ, அதே திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை வைகோவிற்கு ஏற்பட்டது. அதே அதிமுகவுடனும் கூட்டணியை வைக்க அவர் மறக்கவில்லை.

Stalin Vaiko - Updatenews360

இதனால், கூட்டணி கட்சிகளின் நம்பகத்தன்மையை இழந்த தலைவராக வலம் வரும் வைகோ, 27 ஆண்டுகளாக தோல்வியையே அதிகம் சந்தித்தார். எந்த திமுகவை எதிர்த்தாரோ, அதே திமுகவினால் தான் தற்போது மாநிலங்களை எம்பியாக இருந்து வருகிறார்.

இப்படியிருக்க, திமுக கூட்டணியில் திருமாவளவன் கூறியபடி தொகுதிகளை வாங்காவிட்டாலும், சொந்த சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக இருந்தார். ஆனால், கடைசி வரைக்கும் பேச்சுவார்த்தையை இழுத்துச் சென்ற வைகோ, வாங்கிய 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இத்தனை ஆண்டுகள் தோல்வியையே அதிகம் சந்தித்து இருப்பதால், இனியும் காலம்தாழ்த்தினால் மதிமுகவுக்கு அழியே ஏற்படும் என்றும், அதோடு, தனது மகன் துரை வையாபுரிக்கும் ஓர் அரசியல் எதிர்காலத்தை கொடுக்க வேண்டும் என்பதையே காரணங்களாக அரசியல் நோக்கர்கள் சொல்லுகின்றனர்.

மேலும், திமுகவுடன் மதிமுகவை இணைப்பதை தவிர வைகோவிற்கு வேறு வழி இல்லை என்றும், இதன் காரணமாகவே, மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தேர்தலுக்கு பிறகு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாக வைகோ கூறி வருவதாக தெரிவிக்கின்றனர்.

எது என்னமோ, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு வைகோ ஒப்புக் கொண்ட போதே, கட்சியை கலைத்துவிட்டு, திமுகவுடன் சேர்ந்து கொள்ளலாம் என நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். தற்போது அதுதான் உண்மையாகி விடும் போல…!!!

Views: - 1

1

0