இனி அழைத்தால் போவோம்… திமுக மீது வைகோ மீண்டும் அதிருப்தி..!!! மறைமுகமாக 3வது அணிக்கு பிள்ளையார் சுழி போடும் மதிமுக..!

4 March 2021, 8:07 pm
Stalin Vaiko - Updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் 2வது கட்டமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் மதிமுகவிற்கு அதிருப்தியே ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கு ஆயத்தமாகும் விதமாக, அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பாமகவுடன் தொகுதி பங்கீட்டு உடன்பாட்டை அதிமுக முதன்முதலாக மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து, அக்கட்சியுடனான கூட்டணி கட்சிகளுடன் இழுபறி நீடித்து வருகிறது.

DMK - IUML - updatenews360

திமுகவை பொறுத்தவரையில், இந்தியன் முஸ்லீம் லீக் கட்சியுடனும், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டது. ஆனால், விடுதலை சிறுத்தைகளுடன் நீண்ட இழுபறி பேச்சுவார்த்தைக்கு பிறகு, இன்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று, சிக்கலில் இருக்கும் காங்கிரசுடனான தொகுதி பங்கீடு பற்றி விவாதிக்க திமுக அழைப்பு விடுத்துள்ளது.

DMK - vck - updatenews360

இதனிடையே, திமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாத நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுகவுடன் மதிமுக குழு பேச்சுவார்த்தையை நடத்தியது. மதிமுகவின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தேர்தல் பணிச் செயலர் அந்திரிதாஸ் மற்றும் சின்னப்பா, செந்தில் அதிபன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த 2வது கட்ட பேச்சுவார்த்தையின் போதும் திமுக இறங்கி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், மதிமுகவினர் அதிருப்தியடைந்திருப்பது அவர்கள் அளித்த பேட்டியில் தெரிய வந்தது.

திமுகவுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு மதிமுக தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மல்லை சத்யா பேசியதாவது :- திமுகவின் நிலைப்பாட்டை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மீண்டும் திமுக அழைத்தால் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். மதிமுகவுக்கான அங்கீகாரத்தை தர வேண்டும் என்று திமுகவிடம் கேட்டுக் கொண்டுள்ளோம். இனி அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும், எனக் கூறினார்.

vaiko Condemned - Updatenews360

இதன்மூலம், இனி வலுக்கட்டாயமாக பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதில்லை என்பதே மதிமுகவின் முடிவு என்பது மல்லை சத்யாவின் பேச்சில் தெரிய வருகிறது. மேலும், கேட்கும் தொகுதியை கொடுக்காவிட்டால், 3வது அணியுடன் கூட்டணி வைத்து, மதிமுகவிற்கான அங்கீகாரத்துடன் போட்டியிடுவதே அந்தக் கட்சியினரின் முடிவாக உள்ளது.

Views: - 125

0

0