இனி ஸ்டாலினை நம்புனா வேலைக்காகாது : வீம்பு பிடிக்கும் வைகோ…. சமாதான முயற்சியில் திமுக..!!!’

2 March 2021, 1:31 pm
Vaiko - stalin - updatenews360
Quick Share

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால், அனைத்து அரசியல் கட்சிகளும், கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், டசன் கணக்கிலான கட்சிகளை கூட்டணியில் வைத்துள்ள திமுக, உதய சூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும், குறைந்த தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு உள்ளிட்ட கண்டிசன்களை போட்டது.

ஆரம்பத்தில் திமுகவின் கண்டிசன்களை அதன் கூட்டணி கட்சிகள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அனைத்தும் சுமூகமாகவே இருக்கிறது என்றே கூறி வந்தனர். ஆனால், தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று திமுகவிற்கு எதிராக விசிக, மதிமுக முதலில் போர்க்கொடி தூக்கியது.

தற்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை அடுத்தடுத்து நடத்தி வருகிறது. அனைத்து கூட்டணி கட்சிகளும் தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி தெரிவித்து வந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் திமுகவின் முடிவிற்கு அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மாநில கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு குறைந்த பட்சம் 12 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என்ற கட்டாயத்தில் மதிமுக உள்ளது. எனவே, திமுகவிடம் 12 தொகுதிகளை வைகோ கேட்டு வருகிறார். ஆனால், 6 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என திமுக கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனால், திமுக கூட்டணியில் நீடிக்கலாமா..? என்று குழப்பத்தில் இருக்கும் வைகோவிற்கு, டிடிவி தினகரன் மற்றும் கமல்ஹாசனின் 3வது அணிகள் சிகப்பு கம்பளம் விரித்து தயாராக இருந்து வருகிறது. எனவே, திமுகவை விட்டு விட்டு வேறு கூட்டணிக்கு தாவி விடலாமா..? என்ற முடிவில் அவர் இருந்து வருகிறார்.

Stalin Vaiko - Updatenews360

இந்த நிலையில், தாயகத்தில் வைகோவை சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே, தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது :- திமுகவுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், 2வது சுற்று பேச்சுவார்த்தை தொடர்பாக திமுக பின்னர் அறிவிக்கும் என வைகோ கூறினார்.

மேலும், திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று விரும்புவது நியாயம்தான் என அவர் கூறியிருப்பது, இருந்தாலும் தங்களின் கட்சியின் எதிர்காலத்தையும் பார்க்க வேண்டாமா..? என்ற கேள்வி எழுப்புவது போன்று உள்ளது.

சட்டப்பேரவை தேர்தலுக்கு குறுகிய நாட்களே இருப்பதால், மதிமுகவின் முடிவு விரைவில் தெரிய வந்துவிடும்.

Views: - 35

0

0